உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முல்" (பொருந்தற் கருத்துவேர்)

முட்டம்-முட்டன் = மூடன் (W.).

முட்டத்தனம் = மூடத்தன்மை (W.).

53

முட்டாட்டம் = (W.). 1. முட்டாள் தன்மை. 2. அறியாமையா லுண்டா குஞ் செருக்கு. அவன் முட்டாட்ட மாடுகிறான் (உ.வ.).

ள்)

முட்டாள்' (முட்டு + ஆள் = மூடன். “முட்டா ளரக்கர்” (திருப்பு. 141). ம. முட்டாள்.

முட்டாள்? = முட்டும்(முட்டித் தாங்கும்) ஆள், தாங்கும் உருவம், அணிகத்தின்(வாகனத்தின்) கீழ் அதைத் தாங்குவதுபோல் வைக்கும் படிமை. க. முட்டாள்.

முட்டரிசி = நன்றாய் வேகாத (வேக்காடு குன்றிய அரிசி (உ.வ.).

முட்டம் = 1. பொருந்திய பக்கம், பக்கச்சரிவு. "நளிமலை முட்டமும்" (பெருங். வத்தவ. 2 : 43). 2. பலர் கூடி வாழும் ஊர் (சூடா.). 'குரங்கணின் முட்டம்' (சிவன் கோயில்).

ஒ.நோ: முட்டா = 1. ஊர்க்கிழமை, குறுநில ஆட்சி. 2. சொத்து (W.). முட்டா-மிட்டா = 1. நாட்டுப் பகுதி, வட்டம். 2. ஊர்க்கிழமை, குறுநில ஆட்சி. 3. சொத்து. 4. உரிமை.

மிட்டா-இந். மிட்டா (mittha).

முட்டுதல் = கூடுதல், பொருந்துதல்.

ஒ.நோ: OE. mitan, OS. motian, ON. moeta, Goth. (ga) motjan, E. meet. OE. motian, E. moot, assembly.

E. wikenagemot = Anglo-Saxon national council or parliament. OE. witena, wise mens. (ge) mot, meeting.

முட்டாட்டம் = முட்டுகை.

முட்டு-ஒ.நோ: E. butt, meet end to end.

முட்டு = தாங்கல். ஒ.நோ: ME. buttress, OF. bouterez, mod.F. bouteret, f. bouter, E. buttress f. butt.

OF. abutex (but, end), end on, E. abut, border upon, abutment, a lateral support.

முட்டுக்கட்டுதல் = 1. கட்டை முதலியவற்றைத் தாங்கலாகக் கொடுத்தல். 2. முழங்காலைக் கைகளாற் கட்டுதல். முட்டுக் கட்டி உட்காராதே (உ.வ.). 3. எல்லை கட்டுதல் (யாழ்ப்.). 4. வழியடைத்தல் (W.).

முட்டுக்கட்டியாடுதல் = பொய்க்காற் கட்டையில் நின்று நடத்தல். முட்டுக்கால்,முட்டுக்கொடுத்தல், முட்டுச் சட்டம், முட்டுச் சுவர் முதலிய தொடர்ச்சொற்கள் தாங்கல் கொடுத்தலையும்;

முட்டுக்கட்டை, முட்டுத்தொய்வு (மூச்சுவிட முடியாமை), முட்டுப்

பாடு முதலிய தொடர்ச்சொற்கள் தடைபண்ணுதலையும்;