106
சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்
கொல்- கோல்- கோலி = உருண்டையான விளையாட்டுக் கருவி. கோள்- கோண்- கோணு. கோண்- கோணம் = வளைவு, வளைந்த மூக்கு, பிறைமுக அம்பு. கோண்- கோணல். கோண்- கோணை- கோணையன்.
கோண்- கோடு
=
கோட்டம்
=
வளைவு. கோடுதல் = வளைதல். கோடு - கோட்டை = வளைந்த வளைவு, ஊர்கோள். கோடு - கோட்டை =
மதில், மதில் சூழ்ந்த இடம், ஊர்கோள்.
2. உல் - சுல்
சுல்- சுலவு. சுலவுதல் = வளைதல்.
=
சுல்- சுள்- சுளை- சுளையம். சுளையமாடுதல் = சுற்றித் திரிதல். சூள்- சுளி. சுளித்தல் = முகத்தோலை வளைத்தல். சுளி - சுழி = வட்டமான கோடு, அதனாற் குறிக்கப்படும் குறும்பு, நீர்ச்சுற்று. சுழி- சுழி - சுழியம் - சுசியம் = உருண்டைப் பலகாரவகை. சுள்- (சுட்டு) சுட்டி வட்டமான கோடு அல்லது புள்ளி, வட்டமான நெற்றியணி, சுழி சுழியாற் குறிக்கப்படும் குறும்பு, குறும்பன். சுழி - சுழியன் = குறும்பன்.
—
=
சுல் - சுன் - சுன்னம் = வட்டம், வட்டமான கோடு. சுல் - சுற்று. சுற்றுதல் = வளைதல், திரிதல், சூழ்தல், சுழலுதல். சுழி- சுழல்.
=
கள் - (சூள்) - சூழ். சூழ்தல் = வளைதல். சுல் - சூர்- சூரல் சுழல்வளி. சுர் - (சுறு) - சூறை = சுழல்வளி. சூறை + வளி = சூறாவளி.
3.உல்- துல்
துல் - துள்- துண்டு - துண்டம் = வளைந்த மூக்கு. துண்டு - துண்டி - தூண்டி = வளைந்த முள். தூண்டி- தூண்டில்.
துள் - (துடம்) - தடம் = வளைவு;
“தடஎன் கிளவி கோட்டமும் செய்யும்”
என்பது தொல்காப்பியம்.
(உரியியல், 23)
துல் - தில் -திரி. திரிதல் = சுற்றுதல். திரித்தல் = வளைத்தல், முறுக்குதல், உருட்டுதல். திரி = முறுக்குண்ட துணி அல்லது கயிறு. திரி - திரிகை = சுற்றும் கல் அல்லது சக்கரம். திரிகை
-