உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




3

மெய்ப்பொருட் சொற்கள்

உலக மக்கட்குள் தமிழர் தலைசிறந்த நாகரிகமுடையவர் என்பதை அவருடைய மொழியமைதியுங் கருத்துமே காட்டும்.

1. சொல்வழக்கு

பண்டைத் தமிழகத்தில், புலமக்கள் மட்டுமன்றிப் பொது மக்களும் சிறந்த அறிவுடையவரா யிருந்தனர். ஆதலால், பொருள்களின் உண்மையியல்புகளை யறிந்து, அவற்றிற்கேற்பப் பெயரிட்டு வழங்கினர்.

இயற்கையாய் எல்லாப் பொருள்களும் உயிர், உயிரில்லது, உயிருள்ளது என மூவகைப்பட்டிருத்தலைக் கண்டு, அவற்றை முறையே உயிர், மெய், உயிர்மெய் என அழைத்தனர் முதுதமிழர்.

உடம்பை உய்ப்பது அல்லது செலுத்துவது உயிர். உள்ளிருக்கும் உயிரை மேலாகப் பொதிந்திருக்கும் உடம்பு மெய்; உயிரையுடைய மெய் உயிர்மெய்.'

உடல்,உடம்பு, குடம்பை,கூடு, மெய், யாக்கை, முடை, கட்டை என உடம்பிற்கு வழங்கும் பெயர்களின் காரணத்தை நோக்கின், அப் பெயர்களை இட்ட மக்களின் உயரிய அறிவு புலனாம்.

உயிருடன் சேர்ந்தே இயங்குவது அல்லது உயிருடனிருப்பது உடல் அல்லது உடம்பு; குஞ்சு பொரித்தபின் தொடர்பு நீங்கும் முட்டைக் கூடுபோல, உயிரைவிட்டு நீங்குவது குடம்பை அல்லது

1. உயிரும் மெய்யும் கூடியது உயிர்மெய் எனக் கூறுவது பொருந்தாது. இக் கூற்று உயிர்மெய் என்னுஞ் சொல் உலக வழக்கற்றபின் எழுந்தது. பிராணனையுடையது பிராணி என்பது போல, உயிரையுடைய மெய் உயிரையுடைய மெய் உயிர்மெய் என்பதே பொருத்தமாம்.