உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஒருபொருட் பல சொற்கள்

51

வழங்கல் என்பது எடுத்துக் கொடுத்தலையும் குறிக்கும். அருளுதல் என்பது அருளிக் கொடுத்தல்.

45. பார்க்கும் வகைகள்

விழித்தல் கண்ணைத் திறந்து பார்த்தல்; பார்த்தல் இயல்பாகக் குறிக்கோளின்றிப் பார்த்தல்; நோக்குதல் குறிக்கோளோடு கூர்ந்து பார்த்தல்; காணுதல் தேடிப் பார்த்தல் அல்லது போய்ப் பார்த்தல்; நோடுதல் சோதித்துப் பார்த்தல் (நோட்டம் சோதனை); கவனித்தல் நுட்பமாய்ப் பார்த்தல்; நாடுதல் ஆராய்ந்து பார்த்தல்.

46. உறங்கும் நிலைகள்

படுத்தல் கிடப்புநிலை கிடப்புநிலை யடைதல்; சாய்தல் கால்நீட்டி யிருந்துகொண்டு தலையைச் சாய்த்தல்; கிடத்தல் உறங்காது படுக்கை நிலையிலிருத்தல்; கண்வளர்தல் கண்ணை மூடுதல்; துஞ்சுதல் கண்ணைமூடித் தூங்குதல்; தூங்குதல் தொட்டிலிலாவது தூங்கு கட்டிலிலாவது கண்படை செய்தல்; உறங்குதல் ஒடுக்கநிலை யடைந்து அயர்ந்து தூங்குதல்.

47. மனச் செயல்கள்

ஒன்றை

முன்னுதல் கருத்தோடும் கருத்தில்லாமலும் உளத்திற்கொள்ளுதல் (to think); உள்ளுதல் ஒன்றை ஊக்கத்தோடு முன்னுதல்; உன்னித்தல் ஒன்றை முன்னிக் கண்டுபிடிக்க முயலுதல் (to guess); உணர்தல் புலன் வழியாலன்றி நேரடியாக உள்ளத்தால் அறிதல்; அறிதல் புலன்வழியாக உள்ளதாற் காணுதல்; உகத்தல் ஒன்றைச் சிறப்பாக விரும்புதல் (to choose); ஊகித்தல் காரண காரியங்களில் ஒன்றை யொன்றாலறிதல் (to infer); எண்ணுதல் யோசித்தல்; ஓர்தல் ஒன்றி அல்லது பொருந்த வுணர்தல்; ஓய்தல் நுணுகி ஆய்தல்; உன்னுதல் தியானித்தல், கண்ணுதல் கவனமாய் முன்னிப்பார்த்தல் (to consider); கணித்தல் கணக்கிட்டுக்

கண்டுபிடித்தல் (to calculate); கருதுதல் சற்று விருப்பத்தோடு முன்னுதல் (to intend); சூழ்தல் ஆலோசித்தல்; தெரிதல் ஒன்றன் தன்மையறிதல்; தெரித்தல் தெரிந்தெடுத்தல் (to select); தெளிதல் ஐயம் அகலுதல் அல்லது கலக்கம் நீங்குதல்; தேறுதல் உறுதி கொள்ளுதல், நம்புதல்; தேர்தல் பரீட்சித்தல், ஆய்ந்தெடுத்தல்; நினைத்தல் ஞாபகங்கொள்ளுதல் (to remember); மதித்தல் நிதானித்தல்; மானித்தல் முன்னியளத்தல்; தீர்மானித்தல் முன்னியளந்து முடிவு செய்தல்; உசாவுதல் உரையாடி ஆலோசித்தல்