உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




52

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

(discussion); கொள்ளுதல் ஒன்றை நம்புதல்; உட்கொள்ளுதல் உள்ளத்திற்கொள்ளுதல்.

48. இகழும் வகைகள்

எள்ளுதல் மனத்தால் இகழுதல்; இகழ்தல் சொல்லால் இகழுதல்; பழித்தல் சொல்லால் அல்லது செயலால் இகழுதல்.

49. வையும் வகைகள்

ஏசுதல் 'வாங்கிக் குடித்தவன்', 'இரப்பெடுத்தவன்' என வறுமைநிலையைச் சொல்லிப் பழித்தல்; திட்டுதல் 'நாய்', 'பேய்’ என அஃறிணைப் பெயரைச் சொல்லிப் பழித்தல்; வைதல் இடக்கர்ச் சொற்களைச் சொல்லிப் பழித்தல்; பழித்தல் பலர் முன் இழுக்கமான செய்திகளைச் சொல்லி அவமானப்படுத்துதல்; சாவித்தல் 'நீ மண்ணாய்ப் போக', 'நீ நாசமாய்ப் போக' எனச் சபித்தல்.

50. கண்டிக்கும் வகைகள்

தெழித்தல் விலங்குகளை அதட்டி ஓட்டுதல்; அதட்டுதல் மக்களை உரத்த குரலால் அல்லது ஒருசில அசைகளால் கடிதல்; கடிதல் குற்றஞ் செய்தவனைக் கோபித்தல்; கண்டித்தல் குற்றஞ் செய்தவன் திருந்துமாறு கோபித்தல்; எச்சரித்தல் குற்றஞ்செய்தவன் திருந்துமாறு அச்சுறுத்தல்; சுழறுதல் மென்மையாகக் கண்டித்தல்.

துணைவினைகள் (நிகழ்கால வினையெச்சத்தின்பின் வருவன) : முடியும் என்பது வினைமுற்றுப் பெறுவதையும், இயலும் என்பது வினைநடத்தலையும், கூடும் என்பது வினைக்குரிய இடம் பொருளேவல் கூடிவருதலையும், ஒண்ணும் என்பது உளப் பொருத்தத்தையும், தகும் வினைத்தகுதியையும், வேண்டும் வினைக்கட்டாயத்தையும், மாட்டுவேன் என்பது வினைசெய்வான் வலிமையையும், சிறப்பாக வுணர்த்தும்.

என்பது என்பது

51. செயப்பாட்டுவினை விகுதிகள்

படு என்பது வினையால் துன்புறுதலையும்; உண் என்பது வினைப்பய னுகர்ச்சியையும், பெறு என்பது வினையாற் பெறும் பேற்றையும், சிறப்பாக வுணர்த்தும்.

52. தொழிற்பெயர் - சூள் வகைகள்

சூள் தெய்வஞ் சான்றாகக் கூறும் உறுதிமொழி; ஆணை அரசாணையின் பேரால் கூறும் உறுதிமொழி; நெடுமொழி