உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஒருபொருட் பல சொற்கள்

53

போர்முனையில் பகைவர்முன் ஒருவன் தன்னை மிகுத்துக்கூறும் கூற்று; வஞ்சினம் 'நான் என்பகைவனுக்கு இன்னது செய்யேனாகில் இன்னநிலை யடையக் கடவேன்' என்று கூறும் சபதம்; பூட்கை ஒரு காரியம் முடியும்வரை வேறொன்றை விலக்கிவைக்கும் உறுதிப்பாடு; மேற்கோள் ஓர் ஒழுக்கத்தை அல்லது நல்வினையை மேற்கொள்ளும் கடைப்பிடி; பொருத்தனை ஒருவன் தனக்குக் கடவுள் செய்யும் ஒரு குறிப்பிட்ட நன்மைக்குப் பதிலாகத் தான் ஒன்றைக் காணிக்கையாகக் கொடுப்பதாகச் செய்துகொள்ளும் வாய்ச்சொல் ஒப்பந்தம்; நேர்த்திக் கடன் கைம்மாறு கருதியும் கருதாமலும் கடவுளுக்கு அல்லது தெய்வத்திற்கு ஒரு பொருளை ஒதுக்கிவைத்தல்.

கங்கு அல்லது கங்கணம் ஒருவன் தன் பகைவனிடத்தில் பழிக்குப் பழிவாங்க வேண்டுமென்று அதற்கடையாளமாகக் கட்டிக்கொள்ளும் காப்பு; ஒட்டு ஒருவன் தான் விரும்பாததொன்றைத் தன் எதிரி செய்யின், அவன் அழிந்துவிடுவான் என்று கூறும் ஆணை.

53. நோன்புவகை

நோன்பு ஆன்மாவின் தூய்மைக்காக ஓரிருவேளை அல்லது நாள் உண்ணாதிருத்தல்; தவம் ஆன்மாவின் தூய்மைப்பாட்டிற் காகவும் அரும்பொருட் பேற்றிற்காகவும் பலநாள் உண்டி சுருக்கல்; துறவு உலகப்பற்றை யொழித்துக் காலமெல்லாம் கடுந்தவம் செய்தல்.

54. போட்டிவகை

இகல் பகைமையால் இடும்போட்டி; இசல் விளையாட்டாக இடும் போட்டி; வீம்பு வம்பிற்கு இடும் போட்டி.

55. சண்டைவகை

சண்டை இருவர் செய்யும் போர்; மல் இருவர்தம் வலிமை காட்டச் செய்யும் போர்; கலாம் பலர் செய்யும் போர்; கலகம் இரு குழுவார் அல்லது கூட்டத்தார் செய்யும் போர்; போர் இருநாட்டார் அல்லது அரசர் செய்யும் போர்; பூசல் போர் ஆரவாரம்; சமர் இரு படைகள் கலந்து செய்யும் போர்; ஞாட்பு செறிந்து செய்யும் போர்; மலைவு பூச்சூடிச் செய்யும் போர்; செரு பகைவரை அழிக்கும் போர்.

56. புறங்கூற்று வகை

புறணி முகத்திற் புகழ்ந்தும் புறத்திற் பழித்தும் பேசுதல்; கு ண்டுணி பலர்கூடி ஒருவரைப் பழித்து நகையாடுதல்; குறளை