உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




54

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

ஒருவர்க்கு மாறாக இன்னொருவரிடம் புறங்கூறிக் கலகமூட்டுதல்; கோள் மேலதிகாரியிடம் ஒருவரைப்பற்றித் தீதாகச் சொல்லுதல்; ஓமல் ஒருவரைப் பழித்து ஊரார் கூடிப் பேசும் பேச்சு; உவலை ஒருவரின்ஆக்கம் பொறாது பிறர்கூறும் கூற்று. ஓமல் உவலை இரண்டும் படர்க்கையிலன்றி முன்னிலையிலும் நிகழும் ஆயினும், புறங்கூற்றின்பாற்படும்.

57. மறுப்புவகை

ம்

மறுப்பு பிறர் கொள்கையை அல்லது கூற்றை மறுத்தல் (refutation); கண்டனம் பிறர் கொள்கையையாவது கூற்றையாவது கண்டித்தல் (censure); அங்கதம் பிறர் கொள்கையையேனும் கூற்றையேனும் பழித்தல் (satire).

58. சோம்பல்வகை

நெடுநீர் ஒரு வினையை நீட்டித்துச் செய்தல்; மறவி ஒரு வினையை மறந்துவிடுதல்; மடி ஒரு வினையுஞ் செய்யாது இருத்தல்; துயில் ஒருவினையுஞ் செய்யாது தூங்குதல்.

59. தண்டனை வகை

மன்றுபாடு மன்றத்தாரால்

விதிக்கப்பட்டு மன்றத்தின்

(தருமாசனத்தின்) முன் செலுத்தும் தண்டம்; குற்றம் தெய்வத்திற்கு மாறாகச் செய்த குற்றத்திற்காகக் கோயிலிற் செலுத்தும் தண்டம்; தண்டா பிறவகையிற் செலுத்தும் தண்டம்.

60. குறிக்கோள் வகை

கொள்கை மத நம்பிக்கை அல்லது சித்தாந்தம் (doctrine); கோட்பாடு சிறு கொள்கை (tenet); குறிக்கோள் குறித்துக்கொண்ட பொருள் (object 8); ஏடல் சொந்தக் கருத்து (idea); நெறிமுறை ஒருவன் தானே அமைத்துக்கொள்ளும் நியதி (principle); நோக்கம் ஒரு பொருளின் மேலுள்ள நாட்டம் (aim); இலக்கு அடையவேண்டிய எல்லை (goal); இலக்கம் எய்யும் குறி (target); விதி ஒழுக்கம் அல்லது மொழிவரம்பு (rule); சட்டம் அரசியலார் அமைத்த விதி(law); மேல்வரிச்சட்டம் ஒருவர் தாம் கையாளுவதற்குத் தாமே அமைத்துக்கொண்ட திட்ட வாக்கியம் (motto).

7. ‘ஊருக்கு ஓமல் வீட்டுக்கு வயிற்றெரிச்சல்' என்பது பழமொழி. 8. கருதுகோள் (Hypothesis) என்பது தற்காலம் புதுச்சொல்.