உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஒருபொருட் பல சொற்கள்

55

சில ஒருபொருட் பலசொற்கள், வேர்ப்பொருள் காரணமின்றி ஆட்சி காரணமாகவே வெவ்வேறு பொருள் குறிப்பனவாயுள்ளன. தொல்காப்பியனார்,

“அன்ன ஆங்க மான இறப்ப

என்ன உறழத் தகைய நோக்கொடு

கண்ணிய எட்டும் வினைப்பால் உவமம்”

(உவமவியல்,12)

“எள்ள விழையப் புல்லப் பொருவக்

கள்ள மதிப்ப வெல்ல வீழ

என்றாங் கெட்டே பயனிலை யுவமம்"

(உவமவியல்,14)

“கடுப்ப ஏய்ப்ப மருளப் புரைய

ஒட்ட ஒடுங்க ஓட நிகர்ப்பஎன்

றப்பால் எட்டே மெய்ப்பால் உவமம்”

(உவமவியல், 15)

“போல மறுப்ப ஒப்பக் காய்த்த

நரவியப்ப நளிய நந்தஎன்

றொத்துவரு கிளவி உருவின் உவமம்”

(உவமவியல், 16)

உவம வுருபுகளை நால்வகை யுவமத்திற்கும் பகுத்துக்

கொடுத்தது ஆட்சிபற்றியே.

இனி அவர்,

6

“செலவினும் வரவினும் தரவினும் கொடையினும்

நிலைபெறத் தோன்றும் அந்நாற் சொல்லும்

தன்மை முன்னிலை படர்க்கை என்னும்

அம்மூ விடத்தும் உரிய என்ப”

(கிளவியாக்கம்,28)

'அவற்றுள்,

தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும்

தன்மை முன்னிலை ஆயீ ரிடத்த”

(கிளவியாக்கம்,29)

“ஏனை யிரண்டும் ஏனை யிடத்த”

(கிளவியாக்கம், 30)

“யாதுஎவன் என்னும் ஆயிரு கிளவியும்

அறியாப் பொருள்வயின் செறியத் தோன்றும்” (கிளவியாக்கம்,31)

"அவற்றுள்,

யாதுஎன வரூஉம் வினாவின் கிளவி

அறிந்த பொருள்வயின் ஐயந் தீர்தற்குத்

தெரிந்த கிளவி யாகலும் உரித்தே"

(கிளவியாக்கம், 32)