உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




56

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

என, செல் வா தா கொடு யாது எவன் என்று சொற்கட்கு இடமும் பொருளும் வரையறுத்தது, ஆட்சியும் பொருளும் பற்றியதாகும்.

யாம் நாம் என்ற சொற்கள், முறையே தனித்தன்மைப் பன்மையும் தன்மைப்பன்மையும் குறித்தற்கும் ஆட்சியே

உளப்பாட்டுத் காரணமாகும்.

இனி, சொல் வேறுபாட்டினாலன்றி விகுதி வேறுபாட்டி னாலும் நுண்பொருள் வேறுபாடு கொண்ட ஒருபொருட் பல சொற்கள் அமைந்துள்ளன.

-

=

=

டு : வாழ்தல் = வசித்தல்; வாழ்க்கை = உயிரோடிருக்கும் காலம்; வாழ்வு = இன்பமாக அல்லது சிறப்பாகப் பிழைத்தல்; வாழ்ச்சி வாழுமிடம்; நிறுத்தல் துலைக்கோலில் தூக்குதல்; நிறுத்தல் படுக்கையிற் கிடப்பதை நட்டுக்கு நிற்கவைத்தல்; நிறுவுதல் கொள்கையை அல்லது நிறுவனத்தை (ஸ்தாபனத்தை) நாட்டுதல்; நிற்பித்தல் ஒருவனை நிற்கவைத்தல், நிற்பாட்டுதல் ஒரு காரிய நிகழ்ச்சியைத் தற்காலிகமாகவாவது நிலையாகவாவது நீக்குதல்.

,

= ஒரு

இனி, பல பெயர்கள் ஒரே பருப்பொருளைக் குறிப்பன வாயினும், அவை யாவும் வெவ்வேறு காரணம் பற்றியன என்றறிதல் வேண்டும்.

எ-டு : யானைப் பெயர்கள்

உம்பல் உயர்ந்தது; உவா திரண்டது; ஓங்கல் மலைபோன்றது; கரி கரியது; கள்வன் கரியது; கறையடி உரல்போன்ற பாதத்தை யுடையது; குஞ்சரம் திரண்டது; கைம்மாதுதிக்கையையுடைய விலங்கு; கைம்மலை கையையுடைய மலைபோன்றது; தும்பி துளையுள்ள கையையுடையது; நால்வாய் தொங்குகின்ற வாயை யுடையது; புகர்முகம் முகத்தில் புள்ளியுள்ளது (ஒருவகை); புழைக்கை (பூட்கை) துளையுள்ள கையையுடையது; பெருமா பெரிய விலங்கு; பொங்கடி பெரிய பாதத்தையுடையது; யானை (ஏனை) கரியது; வழுவை உருண்டு திரண்டது; வாரணம் சங்கு போன்ற தலையையுடையது, அல்லது புல்லை வாரிப்போடுவது; (வேழம் = வெள்ளையானை போலும்.)

இதுகாறுங் கூறியவற்றால், ஒரு பொருட்குப் பலசொற்கள் இருக்கலாமென்றும், அவை யாவும் பருப்பொருளில் ஒத்திருப்பினும் நுண்பொருளில் வேறுபட்டவையென்றும், தப்பான ஆட்சியால்