உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்றொடரியல்

II) நெடுந்தொடரெழுவாய்

87

எ - டு : செந்தமிழாக்கங் கண்ணுங் கருத்துமாய்ப் பேணும் ஒரு புலவர், வடசொல் வழங்குவதற்கொரு காரணம் வேண்டும்.

12) மயங்கற்கிடமான எழுவாய்

எ - டு : குக், கௌடோ செலவிற் கல்வி கற்றார்.

13) இடைப்பிறவைப்பு (இங்கு முன்னும் பின்னும் குறி

வரும்)

எ டு : அரசன், எப்படியிருந்தபோதிலும், மாந்தன்தானே.

14) மறுத்துக்கூறும் சொற்றொடர்ப் பகுதி

எ - டு : அது அறியாமையன்று, கவலையின்மையே.

15) சொற்றொடருறுப்பாய் வரும் மேற்கோள்

எ - டு : “அன்பே சிவம், ” என்றார் திருமூலர்.

ii. அரைப்புள்ளி (Semicolon) வருமிடங்கள்

1) ஒரே யெழுவாயின் பல வினைக்குறை வாக்கியங்கள்

எ-டு : சூழ்ச்சியம் (இயந்திரம்) உழவுத்தொழில் செய்கிறது; மாவரைக்கிறது; இடம் பெயர்விக்கிறது; போர் செய்கிறது; இன்னும் எத்துணையோ வினைகளைச் செய்கிறது.

2) ஒப்புநோக்காய் வரும் கூட்டுவாக்கியம்

எ - டு : அறிவுடையோர் அமைந்திருப்பர்; அறிவிலிகள் ஆரவாரிப்பர்.

iii. முக்காற்புள்ளி (Colon) வருமிடங்கள்

1) தலைப்பு

எ-டு : சார்பெழுத்து:

2) அதிகார எண்

எ-டு : மத்தேயு 8: 6.

3) தன் முகவரியில் நகர்ப்பெயர்

எ - டு : எடின்பரோ : 339, ஐரோடு (பெருஞ்சாலை)