உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்றொடரியல்

புணர்ச்சிபெறின்

விளிக்குறியும்).

89

வியப்புக்குறி

பெறாது.

(வியப்புக்குறியே

டு : என்னே இதன் பெருமை!

“என்னே இதன் பெருமை! என்றான்.

என்னே! இதன் பெருமை யென்றான்.

vii. மேற்கோட்குறி (Quotation Marks or Inverted Commas)

படும்.

மேற்கோட்குறி, ஒற்றைக்குறி இரட்டைக்குறி என இருவகைப்

இரட்டைக்குறி வருமிடமாவன :

1) நேர்க்கூற்று

எ - டு : “நான் வருகிறேன், ” என்றான்.

2) மேற்கோள்

எ - டு : “ஒழுக்கமுடைமை குடிமை,” என்றார் திருவள்ளுவர். ஒற்றைக்குறி வருமிடமாவன :

1) தற்சுட்டு (ஓர் எழுத்தேனும் சொல்லேனும் சொற்றொட ரேனும் தன்னையே குறித்தல்)

எ - டு : 'ஏ', 'பேடு'

2) வாய்பாடு

எ-டு : 'செய்யும்’, ‘தான’

3) சிறப்புக் குறியீடு

எ - டு : ‘வடக்கிருத்தல்'

4) மேற்கோட்குள் மேற்கோள்

எ-டு : இயேசு மக்களை நோக்கி, “ஆயக்காரன் கோயிற்கு வெளியே நின்று, 'தேவனே! தீயோனாகிய என்மீது இரக்கமாயிரும்' என்றான்” என்றார்.

5) பழமொழி

எ-டு : 'நூறுநாள் ஓதி ஆறுநாள் விடத்தீரும்.'

குறிப்பு : மேற்கோட் குறியிருக்குமிடத்திற் புணர்ச்சியிராது.