உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




90

viii. பிறைக்கோடு (Brackets)

ஒற்றைப் பிறைக்கோடு வருமிடமாவன :

1) மொழிபெயர்ப்பு

எ - டு : கட்டிப் (solid) பொருள்.

2) பொருள் கூறல்

கட்டுரை வரைவியல்

எ - டு : பிறரை ரமிக்க (மகிழ)ச் செய்பவன் ராமன்.

3) விளக்கம்

எ : நிலைமொழி (அஃதாவது முதலிலே நிற்கின்ற மொழி).

4) ஒரு பொருளைச் சிறப்பாய் வரையறுத்தல்.

எ-டு: ஒருவன் பிறரிடத்தில் (சிறப்பாய் எளியவரிடத்தில்) இன்சொல்லாற் பேசவேண்டும்.

5) எண் (சிறு பிரிவு)

எ டு : (1)

6) பாட வேறுபாடு

எ - டு : கண்டது கற்கப் பண்டிதனாவான் (பண்டிதனாகான்).

7) உரையிற் சொல்வருவித்தல்

எ - டு : கல்லிடை - (இமய) மலையில்.

இரட்டைப் பிறைக்கோடு (Double Brackets) வருமிடம் : பலவரிப்

பொதுமை.

எ-டு: சாத்தனது கருமை

சாத்தனது வரவு

பண்புத்தற்கிழமை

பகர அடைப்பு (Large Bracket) வருமிடம் :

1) வரிக்கு மிஞ்சிய பகுதி

எ-டு

எ - டு : ஒருமையுடன் நினது திருவடிதன்னை நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்.

2) பிறைக்கோட்டை உட்கோடல்

எ-டு: [இங்குச் சாரியை (சார்+இயை) யாவது இருசொற்களைச் சார்ந்திசைக்கும் அசை.]