உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்றொடரியல்

93

சொன்மூலக் குறியின் விரிவுப் புறத்திலிருப்பது மூலமும் முனைப்புறத்திலிருப்பது திரிவுமாகும்.

2) செருகற்குறி.

எ - டு : தமிழ்க் கழகம்

6. நேர்க் கூற்று, நேரல் கூற்று (Direct and Indirect Speech)

ஒருவர் கூற்றை அவர் கூறியபடியே தன்மையிடத்திற் கேற்பக் கூறுவது நேர்க்கூற்றாகும். அதைப் பொருள் மாற்றாது சொன்மாற்றிப் படர்க்கை யிடத்திற்கேற்பக் கூறுவது நேரல் கூற்றாகும்.

தமிழில் நேர்க்கூற்றே நேரல் கூற்றினும் பெருவழக்காய் வழங்கும். ஆகையால், நேர்க்கூற்று முறையே நேரல் கூற்று முறையறியாத மாணவரெல்லாம் தழுவ வேண்டும். நேர்க்கூற்று ‘என்றான்’, ‘என்று சொன்னான்’, ‘எனச் சொன்னான்' என்னும் வாய்பாட்டுச் சொற் சொற்றொடர்களாலும் நேரல்கூற்று ‘ஆகச்சொன்னான்', சொன்னான்' என்னும் வாய்பாட்டுச் சொற் சொற்றொடர்களாலும் முடிக்கப்படும்.

-

டு : அவன் “நான் வருவேன்” என்றான் - நேர்க்கூற்று.

அவன் தான் வருவதாகச் சொன்னான் - நேரல் கூற்று.

‘என்று

“நீ நாளை மணவழகனார் வீட்டிற்கு வந்தால் உனக்கொரு புத்தகம் வாங்கித் தருகிறேன்” என்று இளவழகனார் சொன்னார். நேர்க்கூற்று.

நான் மறுநாள் (இன்று அல்லது நாளை) மணவழகனார் வீட்டிற்குச் சென்றால் எனக்கொரு புத்தகம் வாங்கித் தருவதாக இளவழகனார் சொன்னார். - நேரல்கூற்று.

“எனது நாட்டார் பெரும்பாலும் அறியாமையுள்ளவர்களா யிருப்பதால், அவர்க்கு அறிவு புகட்டுவான் வேண்டி, கடந்த நாற்பதாண்டுகளாக யான் அரும்பாடுபட்டுப் பல்கலை களும்பற்றிச் சொற்பொழிவு நிகழ்த்தவும் நூலியற்றவும் வேண்டியதாயிற்று, " என்று மறைமலையடிகள் கூறு கின்றார் - நேர்க்கூற்று.

தமது நாட்டார் பெரும்பாலும் அறியாமையுள்ளவர் களாயிருப்பதாகவும், அவர்க்கு அறிவு புகட்டுவான் வேண்டி, கடந்த நாற்பதாண்டுகளாகத் தாம் அரும்பாடு பட்டுப் சொற்பொழிவு நிகழ்த்தவும் நூலியற்றவும் வேண்டியதாயிற்றென்றும், மறைமலை யடிகள் கூறுகின்றார். - நேரல்கூற்று.

பல்கலைகளும்பற்றிச்