உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




94

கட்டுரை வரைவியல்

தமிழில் சில நேரல் சொற்றொடர்கள் நேர்க்கூற்றிலும் நேரல் கூற்றிலும் ஒன்றாயுமிருக்கும்.

எ-டு டு : "இறைவன் திருவடிகளை யடைந்தவர்க்கே பிறவிக் கடல் நீந்த முடியும்," என்றார் திருவள்ளுவர் - நேர்க்கூற்று.

இறைவன் திருவடிகளை யடைந்தவர்க்கே பிறவிக்கடல் நீந்த முடியும் என்றார் திருவள்ளுவர். - நேரல் கூற்று.

நேர்க்கூற்றுச் சொற்றொடர் கூறுவான் பெயரோடு தொடங்கி, என்றான் அல்லது என்று சொன்னான் என்று முடிவது இயல்பு. கூற்றுக்கு முன், சொன்னான் என்னுஞ் சொல்லை நிறுத்தி 'முன் முடிபு'ச் சொற்றொடராகக், கூறின், ‘என்று` என்னும் சொல் இறுதியில் நிற்றல் வேண்டும்.

நேர்க்கூற்று ‘சொன்னதாவது’ என்னுந் தொடர்க்குப் பின்வரின் என்பது என்னுஞ் சொல்லால் முடிதல் வேண்டும். நேர்க்கூற்றில் மேற்கோட் குறியிருப்பினும் இராவிடினும், என்றான் (என்று சொன்னான்) அல்லது என்பது என்னும் முடிப்புச் சொல் இன்றியமையாததாகும், முருகன் சொன்னான், "நான் வருவேன்,” என்று ஆங்கிலத்திற் போலெழுதல் வழுவாகும்.

அழகன் சொன்னதாவது “நான் வருவேன்,” என்பது, என்னும் முடிப்பினும், அழகன் “நான் வருவேன்” என்று சொன்னான், என்னும் முடிப்பே இயல்பும் இனிதுமாகும்.

ஓர் உரையாட்டிலுள்ள கூற்றுகளை, முடிப்புச் சொற்களின்றி மாறி மாறி யெழுதுவது, நூனடையேயன்றி மாணவர் கட்டுரை நடையன்று.

7.

மரபு(Idiom)

பொருள்கட்குச் சான்றோர் தொன்றுதொட்டு வழங்கிவரும் சொற்களையே வழங்குதல் மரபாகும். மரபு தவறின் வழுவாம்.

பிழை

கம்பவைக்கோல்

நண்டுக்குட்டி

திருத்தம்

கம்பந்தட்டை

நண்டுக்குஞ்சி

8. இணைமொழிகள் (Words in Pairs)

(பெருவழக்கானவும் வழக்கற்றனவுமான இணைமொழிகள்

இங்குக் கூறப்பட்டில).