உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்றொடரியல்

97

வீர சூரம்

வீரதீரம்

வெட்கி விறைத்து

வெட்டுங் குத்தும் வேரும் தூரும் வேர்த்துப் பூத்து.

தாட் பூட், லொட்டு லொசுக்கு முதலியவை இழிவழக்காம். 9. தொடர்மொழிகள் (Idiomatic Phrases and Expressions)

அடக்குவாரற்ற கழுக்காணி, அகப்பற்றுப் புறப்பற்றுகளை அறவே ஒழித்து, அகண்ட நிறைவான (பரிபூரண) மெய்யறிவின்ப (சச்சிதானந்த)ப் பிழம்பாகிய, அகத்து மகிழ்ச்சி முகத்து நிகழ்ச்சியாக, அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு, அஞ்சினவனொழிய மிஞ்சினவ னில்லை, அடங்காப்பிடாரி, அடிதண்டம் பிடிதண்டம், அடிதலை தடுமாற்றம், அடி முதல் முடிவரை, அடிமை முதல் அரசன்வரை, அடியற்ற மரம்போல் படிமேல் விழுந்து, அண்டபிண்ட அனைத்துச் சராசரங்களும், அந்தணர் அரசர் வணிகர் வேளாளர், அமிழ்தினுமினிய தமிழ்மொழி, அரிதுணர் பொருளவற்றை எளிதுணர் பொருளவாக்கி, அரைக்காசிற்கும் வழியில்லாத அட்ட தரித்திரம், அல்லோல கல்லோலமாய், அழுத கண்ணுஞ் சிந்திய மூக்குமாய், அறம்பொரு ளின்பம் வீடு, அறிவுநிறை ஓர்ப்புக் கடைப்பிடி, அன்பு அருள் வாய்மை அடக்கம் முதலிய நற்குணங்களை யுடையராய், அன்புள்ள அரசனும் அறிவுள்ள அமைச்சனும்;

,

ஆக்க வழிப்பாற்றல் (சாபானுக்கிரக சக்தி), ஆக்கவும் அழிக்கவும் வல்லவராய், கடும்பா இன்பா மிறைப்பா பெரும்பா (ஆசு மதுரம் சித்திரம் வித்தாரம்) என்னும் நால்வகைப் பாக்களையும், ஆசை காட்டி மோசஞ் செய்து (நாடவைத்துக் கேடு செய்து), ஆடையணியழகனாய், ஆடையின்றி வாடையின் மெலிந்து கையதுகொண்டு மெய்யது பொத்திக் காலது கொண்டு மேலது தழீஇ, ஆணவம் மாயை காமியங்கள், ஆண்டில் இளையராய் அறிவில் முதியராய், ஆயிரம் பிறை கண்டவர், ஆலமுண்ட நீலகண்டன், ஆளுக்கேற்ற வேடம் காலத்திற்கேற்ற கோலம்;

இகபர நலங்கள் (சுகங்கள்), இட்டடிநோக எடுத்தடி கொப்பளிக்க, இடம்பொருளேவல், இட்டதுசட்டம் வைத்தது வரிசை, இம்மைக்கும் மறுமைக்கும் இன்பம் பயப்பதாய், இயன்றவரை முயன்று இருகையினுமேந்தித் தலையில் தாங்கிக் கண்ணிலொற்றி, இருபகட் டொருசகடு, இருமையால் நேர்ந்து (உபயானு சம்மதமாய்), இருவினையொப்பு மலபரிபாகம், இலைமறை இளமையிலேயே, இலக்கண விலக்கிய மதநூல் களையெல்லாம் முற்றக்கற்று, இறைவனுக்கே இன்னோரன்ன, இன்பக்கடலில் மூழ்கி;

காய்போல்,

(சித்தாந்தம்)

வெளிச்சம்,