உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




98

கட்டுரை வரைவியல்

ஈர்ங்கை விதிராத இவறி (உலோபி);

உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை, உடல் கருவி யுல கின்பங்கள்(தனுகரண புவன போகம்), உடல் பொருள் ஆவி மூன்றையும் ஒப்புவித்து, உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்து, உப்புக்குழையாமல், உயிர் ஒடுங்கி உடல் நடுங்கி, உயிருக்குயிராய், உரப்பியுங் கனைத்தும் எடுத்தும் ஒலிக்கின்ற (வடமொழி யெழுத்து கள்), உருவுந்திருவுங் குலமும் குணமும் ஒத்தவராய், உலக வழக்கு செய்யுள் வழக்கு, உலகமெல்லாம் ஒரு குடைக்கீழ் ஆண்டு, உவர்க்கடலன்ன செல்வர், உள்ளதைக்கொண்டு நல்லதைப் பண்ணி, உள்ளும் புறமும் ஒத்து, உள்ளொன்று புறம்பொன்று பேசாமல், உற்று நோக்கி ஊகித்தறிந்து;

,

ஊணுறக்க மொழிந்து, ஊராருடைமைக்குப் பேராசை கொண்டு, ஊரார் உடைமைக்குப் பேயாய்த் திரிந்து, ஊரார் பகைக்கும் தீராப்பழிக்கும் ஆளாய், ஊருக்குழைத்து ஊதாரித்தனமாய்;

எச்சிற்கையாற் காக்கைவிரட்டாத கஞ்சன், எட்டாத பழத் திற்குக் கொட்டாவி விட்டு, எடுத்த காரியம் இடையூறின்றி இனிது முடிதற்பொருட்டு, எடுப்பார்கைப் பிள்ளையாய், எட்டிரண்டு மறியாத, எண்சாணுடம்பு ஒருசாணாகக் குன்றி, எண்ணத்தொலை யாது ஏட்டிலடங்காது, எண்ணுக்கு மெட்டா இறைவன்; எந்நாட்டினு மினிய தென்னாட்டில், எல்லார்க்கும் நல்லவனாய், எல்லாம் வல்ல இறைவன்;

ஏராளமாயும் தாராளமாயும், ஏழை பாழைகளை வயிற்றி லடித்து வாயில் மண்ணைப்போட்டு, ஏற இறங்கப் பார்த்து, ஏனோ தானோ என்றிராமல்;

ஐயந்திரிபறக் கற்று;

ஒட்டிய வயிறும் உலர்ந்த உதடுமாய், ஒரு கண்ணில் வெண்ணெயும் ஒரு கண்ணிற் சுண்ணாம்பும் தடவி, ஒரு பக்கம் பாலும் ஒரு பக்கம் நீரும் ஒழுக, ஒன்றுக்கும் பற்றாத நாயேன், ஓடும் பொன்னும் ஒப்ப நினைக்கும்;

கடன்மடை திறந்தாற்போலக் கவிபாட வல்லவராய், கட்டி யணைத்து உச்சி மோந்து, கடைந்தெடுத்த கழிபெருமடையன், கணக்கு வழக்கின்றி, கண்கவர் கவின்பெறு கட்டடம், கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று, கண்டு கேட்டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும், கண்ணாற் கண்டதைக் கையாற்செய்து, கண்ணீர் வார மெய்ம்மயிர் சிலிர்ப்ப, கண்ணீர்விட்டுக் கதறியழுது,