உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்றொடரியல்

99

கண்ணுக்குக் கண்ணாகவும் உயிருக்குயிராகவும், கண்ணே கனியே பொன்னே பூவே என்று, கண்ணைக் கவர்ந்து உள்ளத்தைக் கொள்ளைகொண்டது, கண்மணிபோற் காத்து, கதிரவனு மதியுமுள்ள காலமெல்லாம், கயல்விழியுங் குயின்மொழியும், கரிபரி தேர்கால் (ரதகஜ துரகபதாதி), கருவிலே திருவுடையார், கல்வியறி வொழுக்கங் களிற் சிறந்து, கலையெலாங் கற்றவன், கற்றோர்க்கேயன்றி மற்றோர்க்கு விளங்காமல்;

காடிடையிட்டும்

வீடு

நாடிடையிட்டும், காடுவாவென போவென, காமவெகுளி மயக்கங்கள், காய்கனி கிழங்குகள், காரியத்திற் கண்ணுங் கருத்துமா யிருந்து, காலாலிட்டதைக் கையாற் செய்து, காலாலிட்டதைத் தலைமேற் கொண்டு, காற்றினுங் கடுகிச் சென்று;

குடிக்கக் கூழுக்கும் கட்டக் கந்தைக்கும் வழியற்று, குழை கொண்டு கோழியெறியும் வாழ்க்கையர், குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டும் கௌவியும் துழந்தும், குற்றத்தை நீக்கிக் குணத்தைக் கொண்டு, கூரிய அறிவும் சீரிய ஒழுக்கமும், கைகட்டி வாய்புதைத்து, கைக்கெட்டினது வாய்க்கெட்டாமல் வாய்க் கெட்டினது வயிற்றுக்கெட்டாமல், கைம்மாறு கருதாமல், கொடாக் கண்டனுக்கு விடாக்கண்டன், கொடியாரை நீக்கி அடியாரைக் காத்து, கொடுப்பாரும் அடுப்பாருமின்றித் தாமே தமியராய், கோடானு கோடிச் சூரிய வொளியுள்ள;

சம்பளமும் உம்பளமும் பெற்று, சாதுரியமாயும் மாதுரிய மாயும் (திறம்படவும் தேம்படவும்) சிந்தையும் மொழியுஞ் செல்லா நிலைமைத்தாகலின், சிறுகக்கட்டிப் பெருகவாழ்ந்து, சின்னாட்பல் பிணிச் சிற்றறிவினர், சுவையொளியூறோசை நாற்றம், செய்வன செய்து தவிர்ப்பன தவிர்த்து, சொற்சுருக்கம் பொருட் பெருக்கம், சொற்சுவை பொருட்சுவைகளிற் சிறந்து, சொன்மதியும் தன்மதியும் (சொற்புத்தியும் சுயபுத்தியும்) இல்லாமல், சொன்னயம் பொருணயம், சொன்னோக்கும் பொருணோக்கும், தொடை நோக்கும் நடைநோக்கும், சொல் தொண்டு (வாசா கைங்கரியம்), சோற்றுக்குச் செலவும் ஞாலத்துக்குப் பாரமுமாய்;

,

தாராளமாய்ப்

,

பேசும்வன்மை,

தட்டுத் தடையின்றித் தட்டுக்கெட்டுத் தறிமாறி, தட்பவெப்பநிலை (சீதோஷ்ண ஸ்திதி), தமிழ்நாடு செய்த தவப்பயனாகத் தோன்றி, தலையுங் காலும் தெரியாது தம்முண்மயங்கி, தலையால் வந்ததைக் காலால் தள்ளி, தவிடுபொடியாய்த் தகர்த்து, தளர் நடை நடந்து மழலை மொழிந்து, தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன், தன்னுயிர்போல மன்னுயி ரெண்ணும் தனிவள்ளல், தான்றோன்றித் தம்பிரான்;