உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




100

கட்டுரை வரைவியல்

துள்ளித் திரிகின்ற காலத்தில் துடுக்கடக்கிப் பள்ளிக்கு வையாமல்;

தெற்கு வடக்குத் தெரியாமல், தென்றல் வீசித் தேன் சொரிந்து வண்டு பாடும் வளமரக்கா, தேனினுமினிய தென்மொழி, தொகை வகை விரி, தொல்காப்பியத்திற் பல்காற்பயின்று, தோற்றம் நடுவிறுதி, தோன்றாத்துணையாயிருந்து;

நடை யுடை பாவனை, நரை திரை மூப்பு, நலிந்தும் வலிந்தும் பொருள் கொண்டு, நல்லதைக் கொள்ளுக அல்லதைத் தள்ளுக, நம்பா மதம் (நாஸ்திகம்) பேசி நாத்தழும் பேறி, நாடியைப் பிடித்து நல்லசொற் சொல்லி, நாத்தளர்ந்து வாய் குழறி, நாநயமும் நாணயமும், நால்வேதம் ஆறு சாத்திரம் பதினெண் புராணம் அறுபத்து நான்கு கலைஞானம், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும், நாளைக்கொரு திறமும் வேளைக்கொரு நிறமும், நிலம் நீர் தீ வெளி நீர் சூழ்ந்த நிலவுலகம், நீர்வளம் நிலவளம் பொருந்திய,

நுண்மாண் நுழைபுலம்;

நூன்மதி பட்டறிவிற்குப் (சுருதி யுக்தி யனுபவங்கட்கு) பொருந்த;

நெஞ்சாரப் புகழ்ந்து வாயார வாழ்த்தி, நெடுஞ்சாண் கிடையாய் வீழ்ந்து, நோயும் நொடியும் பாயும் படுக்கையுமாய்க் கிடந்து, நெற்றியின் வேர்வை நிலத்தில் விழப் பாடுபட்டு;

பகை நட்பு அயலென்னும் முத்திறத்தும் ஒத்து, படை நாலும் புடைசூழ, படைப்புக்காப்பழிப்பு, பட்டபாடும் கெட்ட கேடும், பட்டி மாடுபோற் கட்டுக் காவலின்றிச் சுற்றித் திரிந்து, பத்தியறிவு கடைப்பிடி (பக்திஞான வைராக்கியம்), பரிவன்மை (அசுவதாட்டி) யாகப் பாடக் கூடிய, பருத்த மேனியும் கருத்த கண்களும், பருந்தும் கிளியும் பாங்காய் வாழ, பல்லைப் பிடுங்கிப் பருந்தாட்ட மாட்டி, பார்த்த கண்ணும் பூத்துப்போய்;

பிறப்புப் பிணி மூப்புச் சாக்காடு;

,

புகைவிளக்கு படைப்புக்கள் (தூபதீப நைவேத்தியங்கள்), புலியும் மானும் ஒரு துறை யுண்ண, புலையனும் விரும்பாப் புன்புலால் யாக்கை, பொல்லாரை நீக்கி நல்லோரைக் காத்தல் (துஷ்ட நிக்ரக சிஷ்ட பரிபாலனம்);

மணி மந்திர மருந்துகள், மயிலாடக் குயில் பாட மணங்கமழும் மலர்ச்சோலை, மலையிலக்கு, மனமொழிமெய்கள் (மனோவாக்குக்