உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




114

கட்டுரை வரைவியல்

ஒரு பொருளைப்பற்றிப் பல கருத்துகள் அமைத்துக் கொண்டு, அல்லது ஒரு கதையைப் பல நிகழ்ச்சிகளாக வகுத்துக் கொண்டு, அவற்றை முறைப்படுத்தி, ஒவ்வொன்றையும்பற்றி ஒவ்வொரு யெழுதவேண்டும்.

பாகி

ஒருவரைப்பற்றிக் கட்டுரை வரையும்போது, அவரைக் குறித்த சுட்டுப்பெயரை முதலில் 'அவர்' என்று உயர்வுப்பன்மையில் தொடங்கினால், இறுதிவரை ‘அவர்' என்றே யெழுதல் வேண்டும். ‘அவன்’, ‘அவள்' என்று ஒருமைப்பாலில் தொடங்கினால், இறுதி வரை அங்ஙனமே யிருத்தல்வேண்டும். உயர்ந்தோரையெல்லாம் உயர்வுப் பன்மையிலேயே கூறல் வேண்டும்.

ஒருவர் வளர்ந்து பெரியவரானபின் திரும்பவும் குழந்தை யாதல் கூடாமையின், ஒருவரைப்பற்றி வரையும்போது இளம் பருவத்தைக் கூறும் பகுதியில் ஒருமைப்பாலிலும், வளர்ந்த பருவத்தைக் கூறும் பகுதியில் உயர்வுப் பன்மையிலுமாக வேறுபட வரைவது பொருந்தாது.

வரலாறுகளையும் நிகழ்ச்சிகளையும்பற்றி வரையும்போது, சிறு புன் செய்திகளைக் கூறுதல் கூடாது.

3. போலிகை (மாதிரி)க் கட்டுரை

நாகரிகம்

“நாகரிகம் என்னுஞ்சொல் நகரகம் என்னும் சொல்லினின்று பிறந்தது. நகரகம் என்பது முறையே நகரிகம், நாகரிகம் எனத் திரிந்தது. ஆங்கிலத்திலும் நாகரிகம்பற்றிய வினை நகரப் பெயரினின்று பிறந்ததே. (Civilise from Civitas (Latin) city)

நாகரிகம் என்னுஞ் சொல் நாகர் என்னும் பெயரினின்று பிறந்ததென்றும், நாக ரென்பார் பண்டைக் காலத்தில் நாகரிகத்தி சிறந்திருந்தன ரென்றும், 'ஆயிரத் தெண்ணூறாட்டை முற்றமிழர்' (The Tamils 1800 Years Ago) என்னும் நூலிற் கூறப்பட்டுள்ளது. நாகர் என்பார் பண்டைக் காலத்தில் நாகநா டெனப்பட்ட கீழ்த்திசை நாடுகளில் வாழ்ந்துவந்த ஒரு மக்கள் வகுப்பார். நாகவணக்க முடைமையின், அவர் நாகரெனப்பட்டார். நாகருடைய நாடு நாக நாடு. நாகரில் நாகரிகரும் அநாகரிகருமான இருவகுப்பார் இருந்துள்ளமையும், அவருள் நாகரிகரும் எவ்விதத்தும் தமிழரினும்

இக் குறியிட்ட பாகிகள் உயர்தரப் பாடசாலை மாணவர்க்கு வேண்டாதவை.