உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கட்டுரையியல்

115

உயர்ந்தவரல்லர் என்பதும் மணிமேகலையிருந் தறியப்படும். ஆதலால், நாகரிகம் என்னுஞ் சொல் நாகர் என்னும் பெயரடிப் பிறந்ததன்று.

நாகரிகம் என்பது திருந்திய வாழ்க்கை எனப் பொருள்படும். திருந்திய வாழ்க்கை உலகத்தில் முதன்முதல் நகரத்தில் தோன்றிய மையின் நாகரிகமெனப்பட்டது. இக்காலத்தும் நாகரிகமில்லா தானைப் பட்டிக்காட்டானென்றும், நாட்டுப்புறத்தா னென்றும் பழித்தல் காண்க. நகரமல்லாதது நாடும் பட்டியும்.

நாகரிகம் என்னுஞ் சொல்லைத் திருவள்ளுவர்,

"பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்”

என்னும் குறளில், கண்ணோட்டம் என்னும் பொருளில் வழங்கி யுள்ளார். இது பரிமேலழகர் உரையால் விளங்கும். கம்பரும் இச் சொல்லை இதே பொருளில் ஆண்டுள்ளார். கண்ணோட்டம் திருந்திய குணங்களில் ஒன்றாதலின் நாகரிகமெனப் பட்டதென்க.

அறிவும், அதன் வழிப்பட்ட ஒழுக்கமுஞ் சேர்ந்து திருந்திய வாழ்க்கையாகும். ஒழுக்கமின்றி அறிவுமட்டுமிருப்பின், அது நாகரிக மாகாது; அநாகரிகத்தின்பாற் படுவதே யாகும். ஒழுக்கமில்லாத கற்றோன் கற்ற மூடன் என இழித்திடவேபடுவான்.

அறிவென்பது ஒழுக்கத்திற்குக் காரணமாகிய இயற்கையும் செயற்கையுமாகிய இருவகையாயிருப்பது; அவற்றுள், இயற்கை யாவது குடிப்பிறப்பாலும் தெய்வத்தாலும் அமைவது; செயற்கை யாவது கல்வியாலும் நல்லினத்தாலும் உண்டாவது.

ஒழுக்க மென்பது அகம் புற மென்னும் இருவகைத் தூய்மை. அவற்றுள், அகத்தூய்மையாவது மனம் வாய் மெய் மெய் என்னும் முக்கரணங்களும் தூயவாயிருத்தல்; புறத்தூய்மையாவது உடம்பு, உடை, உணவு, காற்று, உறையுள் முதலியன தூயவாயிருத்தல்.

பரிமேலழகர் திருக்குறளுரைப் பாயிரத்தில், ஒழுக்கத்தைப் பற்றி “ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரிய முதலிய நிலைகளினின்று, அவ்வவற்றிற் கோதிய அறங்களின் வழுவா தொழுகுதல்” என்று கூறியுள்ளார். இஃது எல்லார்க்கும் பொதுவான உயர்தர வொழுக்கமன்று. இதை அவ் வவுரையாசிரியரே மீண்டும்,

+

இக் குறியிட்ட பாகிகள் உயர்தரப் பாடசாலை மாணவர்க்கு வேண்டாதவை.