உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கட்டுரையியல்

117

மக்களை மற்றவுயிரி (பிராணி)களினின்றும் வேறுபடுத்திக் காட்டுவது நாகரிகமேயாதலின், தம்மை உயர்திணை யென்று கூறிக்கொள்வாரெல்லாம் நாகரிகமுடையராயிருத்தல் இன்றியமை

யாததாகும்.

4. கட்டுரை வகை (Classification of Essays)

கட்டுரைகள் ஒன்றன் வரலாறுரைப்பதும், ஒன்றை வரணிப்பதும், ஒன்றைக் கருதியுரைப்பதும்பற்றி வரலாறு, வரணனை, கருதியல் என மூவகைப்படும்.

1) வரலாறு (Narrative Essay)

வரலாற்றுக் கட்டுரை (1) கதை, (2) நாட்டு வரலாறு (History), (3) வாழ்க்கை வரலாறு (Biography), (4) நிகழ்ச்சி (Event), (5) உரை யாட்டு அல்லது தருக்கம், (6) வழிப்போக்கு என ஆறு வகைப்படும்.

அவற்றுள் கதை, பழங்கதை புதுக்கதை என இருவகைப்படும். பழங்கதை படிக்கூற்று, சுருக்கம், விரிப்பு, திரிப்பு என நான்கு முறையாய் கேற்கும்; புதுக்கதை உண்மை நிகழ்ச்சிகளினின்று புனைந்ததும்,புதுவதாகக் கட்டியது மென இருவகைப்படும்.

எழுதற்

2) வரணனை (Descriptive Essay)

வரணனைக்கட்டுரை, (i) பொருள், (ii) இடம், (iii) காலம், (iv) சினை, (v) குணம், (vi) தொழில், (vii) காட்சி, (viii) நிகழ்ச்சி என எண் வகைப்படும்.

3) கருதியல் அல்லது சிந்தனை (Reflective Essay)

கருதியற் கட்டுரை (i) அறிவுரை, (ii) விளக்கம் (Exposition), (iii) சீர்திருத்தம், (iv) கண்டனம் அல்லது மறுப்பு, (v) நகைமொழி (Wits and Humour), (vi) பாணிப்பு (Imagination) என அறுவகைப்படும்.

நிகழ்ச்சி இரண்டனுள், முன்னது உள்ளவாறுரைப்பது; பின்னது புனைந்துரைப்பது.

5. கட்டுரைப் பொருள்கள் (Subjects for Composition)

1) புலவர்- தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடி கள், ஒளவை, கம்பர், புகழேந்தி, காளமேகம், மறைமலையடிகள் முதலியோர்.

2) அரசர் - கரிகாலன், சேரன் செங்குட்டுவன் முதலியோர்.