உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




126

xxiv. நூல்நிலையத்தின் நன்மைகள்

கட்டுரை வரைவியல்

(1) வரையறை. (2) நூல்நிலைய வகைகள் - சொந்த நூல்நிலையம், பொது நூல்நிலையம், சுற்றிவரு நூல்நிலையம், சேமிப்பு நூல்நிலையம். (3) நூல்நிலைய விதியொழுங்குகள்,

(4) பயன்பாடு, (5) முடிவு.

XXV. தட்பவெப்ப நிலையால் மக்களிடை வேறுபடுவன (The effects of climate on Man)

முகவுரை தட்பவெப்ப நிலையால்

வேறுபடுவன (1) உணவு, (2) உடை, (3) தொழில், (4) நிறம், (5) வடிவம், (6) மொழி, (7) கருத்து, (8) மதம், (9) பழக்கவழக்கம், (10) முடிவு.

xxvi. இந்திய விடுதலையால் இந்தியர்க்கு ஏற்பட்டுள்ள நன்மைகள்

(1) பதவிப்பேறு, (2) பொருளாட்சிப் பெருக்கம், (3) வணிக வளர்ச்சி, (4) உலக மதிப்பு.

xxvii. சிற்றூர் (கிராம) அல்லது நாட்டுப்புறச் சீர்திருத்தம் (Rural re-construction)

8

இந்தியாவில் 51/2 இலக்கம் (லக்ஷம்) சிற்றூர்கள், நூற்றுமேனியில் நகர மக்கள் 11 பேர்; சிற்றூர் மக்கள் 89 பேர் - சீர்திருத்த வழிகள்: (1) கல்வி: (இந்தியருள் எழுதப் படிக்கத் தெரிந்தவர் 100-க்கு 8 பேர்) கட்டாய முதன் முறைக் கல்வியும் இராப் பாடசாலையும், (2) நலவழி: (இந்தியரின் சராசரி வாழ்நாள்) படக்காட்சி, பொருட்காட்சி, சொற்பொழிவுகளால் நலவழி யறிவு புகட்டல், (3) கடன் நீக்கம்: (உழவரின் சராசரிக் கடன் பிரிட்டிஷ் இந்தியாவில் 31 உருபா; சென்னை மாகாணத்தில் 50 உருபா) கூட்டுறவுக் கழகம், வரிக்குறைப்பு, (4) திருந்திய தொழின்முறை, (5) தொழிற்பெருக்கம்: குடிசைக் கைத்தொழிலும் புள் விலங்குப் பண்ணைகளும், (6) பொது அறிவு : வானொலியும் சொற்பொழிவும்

முடிவு.

xxviii. கூட்டுறவுக் கழகம் (Co-operative Societies)

கூட்டுறவு வழிகள் : தொழில், விற்பனை, கொடுக்கல் வாங்கல் கூட்டுறவுக் கழக வகை : (1) பதிவு செய்தது, (2) பதிவு செய்யாதது கூட்டுறவுக் கழகத் தோற்றம் (19ஆம் நூற்றாண்டில் செர்மனியில்) - இந்தியாவில், 1904ஆம் ஆண்டுக் கூட்டுறவு நாணயச் சட்டம், 1912ஆம் ஆண்டு இந்தியக் கூட்டுறவுச் சட்டம் பதிவு செய்த கழக வகை :

-

(1) நகரக் கழகம், (2) சிற்றூர்க் கழகம் - கழக அமைப்பு : பேரவை,