உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கட்டுரையியல்

127

செயலாளர், இயக்குநர் (Director), தலைவர், காசாளர் (Cashier) கணக்கர், (பதிவாளரால் பதிவு) - கூட்டுறவு முதல் சேரும் வழிகள் - உறுப்பினர் கடன் வாங்கும் முறை - கழக வருவாய்ப் பகிர்வு - கழகத்தின் பயன்கள் முடிவு.

xxix. செய்தித்தாளின் பயன் (The advantages of news-papers)

16ஆம் நூற்றாண்டில் வெனிஸ் நகரத்தில் செய்தித் தாள் தோற்றம் - இங்கிலாந்தில் 17ஆம் நூற்றாண்டில் செய்தித்தாள் - இந்தியாவில் இந்திய விளம்பரப் பட்டியல் (India Gazette) இராசாராம் மோகன்ராய் செய்தித்தாள் தொண்டு - செய்தித்தாள் வகைகள் - அவற்றின் பயன்கள் - முடிவு.

-

XXX. தற்காலப் போர்முறை (Modern methods of warfare)

முகவுரை - வானப்படை (Air Force) - வானூர்தி வகை : பொருவான் (Fighter), நெருப்புமிழி (Spitfire), குண்டுமுகில் (Bomber) முதலியன; குண்டு பொழிமுறை : (1) உயர் மட்டக் குண்டுப் பொழிவு (High Level Bombing), (2) தாழ்மட்டக் குண்டுப் பொழிவு (Low Level Bombing), (4) பருந்து வீழ்ச்சி அல்லது கீழப்பாய்ச்சற் குண்டுப் பொழிவு (Dive Bombing); குண்டு வகை : எரிகுண்டு, வெடிகுண்டு, தொட்டால் வெடிப்பான், பிந்தி வெடிப்பான், துளைத் துருவி முதலியன; குதிகுடைப் படை (Parachute army). நாவாய்ப்படை (Navy): கடற் போர்க்கருவிகள் : போர்க் கப்பல் (Battle ship), அழிப்பான் (Destroyer), நீர் மூழ்கி (Submarine), இயங்கிப் படகு (Motor boat), காந்தச் சுரங்கம் (Magnetic mine), சுரங்கவாரி (Mine Sweeper), நீர்க்கணை (Torpedo) முதலியன. நிலப்படை :நீட்டு வீச்சுப் பீரங்கி (Long range gun), பொறிப் பீரங்கி (Machine gun), வானெதிர்ப்புப் பீரங்கி (Anti aircraft gun), தாங்கி (Tank), பொருநர் (Soldiers), அணுக்குண்டு, நீரியக் குண்டு, கண்டமேலேவி(I.C.B.M.).

Xxxi. காசுமீரத் தொல்லை

1) இந்திய விடுதலையும் பாக்கித்தான் தோற்றமும் (1947).

2) காசுமீர முகமதியர் பெரும்பான்மையும் பாக்கித்தான் கிளர்ச்சியும்.

3) ஒன்றிய நாட்டமைப்புத் தலையீடு.

4) சமரசப் பேச்சுகளும் அவற்றின் முறிவும்.

5) முடிவு.