உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கட்டுரையியல்

129

(கடைச்சங்கத்திற்குப் பின்)

2) இசைத்தமிழ் மறைவு. குலப்பிரிவினையும் பிறப்பா லுயர்வுதாழ்வும், பாணர் இசைத் தொழில் இழத்தல், சமண பவுத்தங்கள் இசைத்தமிழை வெறுத்தல், ஆரியர் இசைத்தமிழை வடமொழியில் மொழிபெயர்த்தலும் வடசொற்களை இசைத்தமிழிற் புகுத்தலும், வடமொழிக்கு உயர்வும் தென்மொழிக்குத் தாழ்வும் கற்பிக்கப்பட்டமை, தமிழரசர் வலி குன்றியமையும், தெலுங்க அரசரும் கன்னட அரசரும் தமிழ்நாட்டை ஆண்டமையும், மகமதிய மன்னர் தென்னாட்டைக் கர்நாட்டக் என்று அழைத்தல், புரந்தரதாசர் கன்னட கீர்த்தனையும் தியாகராச ஐயர் தெலுங்குக் கீர்த்தனையும், இசைத்தமிழ் கர்நாடக சங்கீதம் என்று பெயர் பெறலும் தமிழ்ப்பாட்டு அருகலும் இசைத்தமிழ் நூலழிவும்.

3) இசைத்தமிழ்ப் புதுக்கம் - அரசர் அண்ணாமலைச் செட்டியார் 'தமிழிசை இயக்கம்’ 1940-ல் பணம் ஒதுக்கல், தமிழிசை யெதிர்ப்பு, தனித்தமிழ் இசையரங்கு, புதுத்தமிழ்க் கீர்த்தனைகட்குப் பரிசும் அவற்றின் வெளியீடும், சென்னைத் தமிழிசைச் சங்கம், சென்னைத் தமிழிசை மாநாடு.

-

முடிவு தமிழிசை இயக்கம் வலுத்தலும், எதிர்ப்புக் குன்றி யொழிதலும்.

xxxvii. உலக அமைதி அல்லது போரை ஒழிப்பதெப்படி?

1) உலகத்துப் பொது ஆட்சி நிறுவல், (2) தேசீய வெறி விலக்கு, (3) பன்னாட்டுறவு, (4) மக்களெல்லாரும் ஓரினம் என்னும் உணர்ச்சியைப் பரப்பல், (5) மிகைப்பிறப்புத் தடை.

xxxviii. இந்திய வொற்றுமைக்கான வழிகள்

1) வலிமையுள்ள மையம், (2) மொழிவாரி மண்டலப் பிரிவு, (3) போதிய மண்டல வுரிமை, (4)

குலவேறுபாட்டொழிப்பு,

(5) மதப்பொறுதி, (6) எளியவர் முன்னேற்றம்.

xxxix. இலவசக் கட்டாயத் துவக்கக் கல்வி

1) நாட்டு முன்னேற்றத்திற்கு எழுத்தறிவின் அடிப்படை, (2) இங்கிலாந்தில் 1875-இல் ஏற்படுத்திய கட்டாயக் கல்விச் சட்டம், (3) பிறநாடுகளில் பொதுமக்கள் அறியாமையைப் போக்கிய வழிகள், (4) இந்தியாவில் எழுத்தறியாதவர் நூற்றுக்குத் தொண்ணூற்று வராயிருத்தல், (5) அரசியலாரும் பெருஞ் செல்வரும் செய்ய வேண்டிய கடமை, (6) முடிவு.