உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பின்னிணைப்பு

1. கட்டுரை திருத்தும் முறை

ஆசிரியர், சிவப்பெழுதுகோலால் அல்லது சிவப்பு மையில், மாணவர் கட்டுரைப் பிழைகளைக் கீழ்வருமாறு குறித்தல் நலம்.

மாணவர் தாமாகவோ ஆசிரியரைக் கேட்டோ பிழை தெரிந்து, குறிப்புப் புத்தகத்தின் இடப்பக்கத்தில் ஒவ்வொரு பிழையையும் நேர் நேர் ஒவ்வொரு முறை திருத்தல் வேண்டும். மாணவர் எப்போதும் கருப்பு அல்லது கருநீல மையிலேயே கட்டுரை வரையவும் பிழை திருத்தவும் வேண்டும்.

i. பிழை குறிக்குமாறு

1) கட்டுரையில் தலைப்பு, தேதி, பயிற்சியெண் என்பவை குறிக்கப் பெறாவிட்டால், அதனதன் பெயரை எழுதி ஈற்றில் வினாக்குறி யிடுக. எ-டு: தலைப்பு?

2) ஓர் எழுத்து மிகையாயிருந்தால் அதை ஒரு சிறு சாய்கோட்டா லும், ஒரு சொல் அல்லது சொற்றொடர் மிகையாயிருந்தால் அம் மிகை முழுவதையும் ஒரு கிடை (Horizontal)க் கோட்டாலும், உருவ அடித்துவிடல் நலம்; பல வரிகள் மிகையாயிருப்பின், அவற்றை வரிவரியாய் அடித்துவிடலாம்; ஒரு பாகி முழுதும் மிகையா யிருப்பின் அதன் குறுக்கே ஒரு மூலைவிட்டக் (transverse) கோடிழுத்தல் நலம். வை மிகைக்குறி.

எ-டு: வெட்கம்.

நல்வினையாவது தீவினையாவது.

ஓர் எழுத்தேனும் சொல்லேனும்

சொற்றொடரேனும்

தவறாயிருப்பின், அத் தவற்றுப் பகுதிக்குக் கீழ்க்கோடிடல் நலம். பல வரி தவறாயிருப்பின், அவற்றின் ஓரமாய் வரந்தையில் ஒரு நட்டுக் (vertical) கோடு இடலாம். இவை தவற்றுக்குறி.

எ-டு : பெறிய.

அவன் தன்னைச் சந்தோஷமுள்ளவ

னாக்குதற்கு மற்ற

ஜனங்களிடம் சாதுவாயும், அநேகக் கதைகள் சொல்வதும், அவர்கள் இதைக் கேட்டுச்சிறிப்பதும், மேலும் ஓர் அதிசயமான வேலை ஜனங்களை ஒற்றுமையாக்குகிறான்.