உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




138

கட்டுரை வரைவியல்

சொற்பிழையின்றிப் பொருட்பிழையிருப்பின், அதை ஒரு வளைகோட்டால் அல்லது நெளிகோட்டாற் குறிக்கலாம்.

3) ஓர் எழுத்தேனும் சொல்லேனும் சொற்றொடரேனும் ஓர் இடத்தில் விடப்பட்டிருப்பின், அவ்விடத்தில் ஒரு குவி குறியிடல் நலம். இது செருகற் குறி.

ப்

எ-டு : ஊருக்கு போனான்.

4) ஓர் எழுத்தேனும்

சொல்லேனும்

சொற்றொடரேனும்

இடமாறியிருப்பின், அதனைச் சூழ ஒரு வட்ட அல்லது நீள்வட்ட அல்லது நீள்நாற்கர (சதுர)க் கோடிழைத்து, அதனின்றும் ஓர் அம்புக் குறியோ கோடோ அதன் சரியான இடத்திற்கு நீட்டிவிடல் நலம். இது இடமாற்றுக் குறி.

எ-டு : உளறினான் அவன் குடித்திருந்தான்; அதனால்தான்

ஒரு கட்டுரை குறிக்கப்பட்டதல்லாத வேறொரு பொருள் மேலதாயின், அக்கட்டுரை நெடுக ஒரு மூலைவிட்டக் கோடிழுத்து விட்டு, பொருள் வேறு என்று எழுதிவிடலாம்.

ஆசிரியர் பிழை குறித்தலேயன்றி அவற்றைத் திருத்துதல் நன்றன்று; திருத்தின், மாணவர் கவனியாது பார்த்தெழுதமட்டும் செய்வர்.

பொருளுக்கு மூன்றும்

ஒவ்வொரு கட்டுரையையும், இலக்கணத்திற்கு இரண்டும், எழுத்தழகு, துப்புரவு (neatness), பாகியமைப்பு, நிறுத்தக்குறியீடு, நடை என்பவற்றிற்கு ஒவ்வொன்று மாக, மொத்தம் 10 மதிப்பெண்ணைப் (mark) பேரெல்லை (maximum) யாக வைத்துக் கொண்டு திருத்துதல் நலம்.

முழுவன் எழுதப்பட்ட ஒரு கட்டுரை, எவ்வளவு பிழை மலிந்திருப்பினும் 11/2 மதிப்பெண்ணிற்குக் குறையாது பெறலாம்.

ஆசிரியர், மாணவர் கட்டுரைகளைப்பற்றித் தம் கருத்தைக் குறிப்பிடும்போது, தாழ்வு (poor), மிகத் தாழ்வு (very poor), கேடானது (bad), மிகக் கேடானது, நன்மை யடுத்தது (fair), நன்று (good), மிக நன்று, சிறந்தது, தலைசிறந்தது (excellent) என்பவற்றுள் ஒன்றை எழுதலாம்.