உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




எழுத்தியல்

3) நிகழ்கால இடைநிலைகள்

கிறு, கின்று, ஆநின்று

எ - டு : இருக்கிறான், எழுகின்றான், ஓடாநின்றான்.

4) இணைக்குறிலல்லாச் சொல் உகரவீறு

LO

5

இணைக்குறின் மொழியல்லாத சொற்களிலெல்லாம் உகர வீறு ஏறி வருவது (அஃதாவது தனிநெடிற்குப் பின்னும் இரண்டு முதலிய பல எழுத்திற்குப் பின்னும், உகரம் ஏறிவருவது) வல்லின றகரம்.

எ - டு : காறு, களிறு.

பிழை

திருத்தம்

ஊரு, குளிரு

ஊர், குளிர்

5) குற்றியலுகரம்

குற்றியலுகரம் ஏறிவரக்கூடிய மெய் வல்லின றகரமே.

(ஈரெழுத்திற்குக் குறையாத, ஈரெழுத்தாயின் நெடிலை முதலாகக்கொண்ட, ஒரு சொல்லின் கடைசியில் வல்லின மெய்யின் மேல் ஏறி வரும் உகரம் குற்றியலுகரம் என்னும் பொது விதியை நினைக்க.) எ - டு : ஆறு, கிணறு, மற்று, கன்று.

இவ் விதி முந்தின விதிகளில் அடங்குமேனும் தெளிவுபற்றி வேறாகவும் கூறப்பட்டது.

6) புணர்ச்சித் திரிபு

ல், ன் என்ற மெய்களின் புணர்ச்சித் திரிபெல்லாம் வல்லின றகரமே.

எ - டு : ல் -கல் + பலகை - கற்பலகை எ-டு

கல் + தாழை = கற்றாழை

வருதல் + கு = வருதற்கு

ன் -தன் + பெருமை = தற்பெருமை

பொன் + தோடு = பொற்றோடு

அதன் + கு = அதற்கு.

வந்ததன் + கு = வந்ததற்கு