உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




எழுத்தியல்

பொருக்கு - சோற்று வடு

பொருப்பு - மலை

மர -ஏ.கடினமாகு, உணர்ச்சியறு;

பெ. எ. மரத்தாலான

மரம் - விருட்சம் (வ.)

மரல் -ஒரு பூண்டு

மரி - இற

மரு -ஏ, பொருந்து;

பெ. வாசனை,

ஒரு பூண்டு, மணமகனுக்குப் பெண் வீட்டில் செய்யும் முதல் விருந்து.

மருகு - மருக்கொழுந்து

மரை - ஒருவகை மான், விளக்குக் காய், திருகுசுரை, தாமரை.

மாரன் (வ.) - மன்மதன்

முருகுமணம்,

முருகு மணம், இளமை,

அழகு, முருகன், ஒரு காதணி

முருக்கு ஒரு மரம்

வரம் - (gift)

வரை - ஏ. (to draw, to marry) நீக்கு, பொருந்து; பெ. வரி, கணு, மூங்கில், மலை, அளவு.

விரகு - தந்திரம்

பொறுக்கு ஒவ்வொன்றாயெடு, தெரிந்தெடு.

பொறுப்பு உத்தரவாதம்

மற ஏ.நினைவறு (to forget); பெ. எ. மறக்குல, வீர.

மறம் - வீரம், பாவம், ஒரு குலம், ஒரு கலம்பக உறுப்பு.

மறல் - வீரம், பாவம், சினம்.

மறி ஏ.தடு,மடக்கு, திரும்பு; பெ. ஒருவகை ஆடு, சில

விலங்கின் பெண்

மறு ஏ. (to refuse, to deny) பெ. குற்றம், களங்கம்; பெ .எ.மற்ற.

மறுகு - ஏ. மயக்கு; பெ. வீதி

மறை ஏ. ஒளி; பெ. ஒளிவு, இரகசியம், வேதம், மறுத்தல்.

மாறன் - பாண்டியன், பகைவன்

முறுகு - திருகு, பதங்கடந்து வேகு.

முறுக்கு ஏ. திருகு, அதட்டு, அச்சுறுத்து, ஆரவாரி;

பெ. திருக்கு, ஒரு பலகாரம்.

வறம் வறட்சி

-

வறை பொரித்த காய்கறி

விறகு எரிக்குங் கட்டை

11