உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12

விரல் - (finger)

விரை - ஏ. விதை,

வேகமாகு; பெ. விதை.

வெரு - அச்சம்

கட்டுரை வரைவியல்

விறல் வெற்றி, வல்லமை, மெய்ப்பாடு, சத்துவம்.

விறை கடினமாகு, நீள், இறந்தவுடம்பு

நீள், குளிரால் நடுங்கு.

வெறு - ஏ. பகை, நிரம்பு, பெ.எ. ஒன்றுமில்லாத, தனியான.

சில சொற்கள் ரகர றகர வேறுபாடின்றி எழுதப்படும்.

அவையாவன:

காரல், காறல்; சுரண்டு, சுறண்டு; சுரீர், சுறீர்; சுருக்கென்று, சுறுக்கென்று; கருத்து, கறுத்து; சுருசுருப்பு, சுறுசுறுப்பு; தருவாய், தறுவாய்; புரந்தர, புறந்தர; முரி, முறி.

தவிர, தவற என்னுஞ் சொற்களை ஒன்றோடொன்று மயக்கக் கூடாது. தவிர (தவிர் + அ) = except; தவற (தவறு + அ) = to fail.

=

சில சொற்களில் வருபவை ரகரமா, றகரமா என்னும் ஐயப்பாட்டை, அச் சொற்களின் மூலத்தையேனும் பகுதியையேனும் அறிந்து அகற்றிக் கொள்க.

எ - டு : உருக்கு என்பது உருகு என்னுந் தன்வினையின் பிறவினை.

பொறாமை என்பது பொறு என்னும் வினையடியாய்ப் பிறந்த எதிர்மறைத் தொழிற்பெயர். ஒப்பு (ப.) - ஒப்புறவு (தொ. பெ.) வரையறு (ப.) வரையறவு (தொ. பெ.).

அவ்வாறு, எண்ணியவாறு என்னும் தொடர்மொழிகளின் ஈற்றில் உள்ளது ஆறு என்னும் பெயர். இங்ஙனமே பிறவும்.

ஒருவகையானும் ரகர றகரம் அறியப்படாத சொற்களை

ஆசிரியர்வாய்க் கேட்டுணர்க.

4. ளகர ழகர வேறுபாடுகள்

i. ளகரம் வருமிடங்கள்

1) இரட்டித்தல்

எ - டு : வெள்ளை, தெள்ளிய.