உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




எழுத்தியல்

2) தனிக்குறில்மெய்

தனிக்குறிலையடுத்த மெய்யாய் வரும்.

எ - டு : எள், கள், கொள்.

3) ஆள், ஆளன், ஆளம், ஆளி என்னும் பெயரீறு (noun suffix) களும், அள், ஆள் என்னும் பெண்பால் விகுதிகளும்

13

எ-டு : வேலையாள், மணவாளன், மலையாளம், மலையாளி, அவள், வந்தாள்.

4) திரிபு புணர்ச்சி

புணர்ச்சியில் டகர ணகரமாய்த் திரிவது பெரும்பாலும் ளகரம். ழகரம் மரூஉச் சொற்களிலன்றித் திரிவதில்லை.

எ - டு : கள் + குடி - கட்குடி, தெள் + நீர் = தெண்ணீர் தமிழ் + சங்கம் - தமிழ்ச்சங்கம்,

யாழ் + பாணம்

=

யாழ்ப்பாணம்

ழகரம் சிறுபான்மை மரூஉப் புணர்ச்சியில் திரிதல்.

எ - டு : வாழ் + நன் - வாணன்; மகிழ் + நன் = மகிணன்; சோழன் (சோழ்) + நாடு = சோணாடு;

(புழை) பூழ் + கை = பூட்கை (யானை); நாழி + உரி = நாடுரி (1/2 படி)

5) (பெரும்பாலும்) திசைச்சொற்களும் வடசொற்களும் எ-டு: பிரளயம்.

குறிப்பு :தொழிற்பெயர் விகுதிகளில், 'உள்' தவிர மற்றவற்றின் ஈற்றில் வரக்கூடியது லகர மெய்யே.

எ - டு : தல் (படித்தல்), அல் (பாடல்), கல் (கொடுக்கல்), சல்

(கடைசல்).

ii. ளகர ழகரச் சொற்கள்

அளம்-உப்பு

அளகு - பெண் பறவை, கோழி

அளி - ஏ. தா, அருள், கா, குழை; பெ. அருள், வண்டு, சேறு.

அழம் - பிணம்

அழகு

அலங்காரம்

அழி கெடு