உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16

-

சளக்கு ஓர் ஒலிக்குறிப்பு

சளி -குளிர், தடுமம்.

சுளி - முகங்கோணு, கோபி.

சூள்-ஒட்டு (ஆணை)

சோளம் -ஒரு தவசம்

தளை ஏ.கட்டு; பெ. கட்டு, விலங்கு, ஒரு செய்யுளுறுப்பு

தாளம் இசைக் காலவறுதி தாளி - ஏ. குழம்பைத் தாளி; பெ. ஒருவகைப் பனை, கள்ளி. தாளியடித்தல் - பரம்படித்தல் தாள் - நெற்பயிர் முதலியவற்றின் இலை, பாதம், முயற்சி. தெளி - ஏ. தெளிவாகு, சிதறு, ஐயம் நீங்கு தோளன்-தோளையுடையவன்

நாளி-நாய்

நுளை செம்படவர் குலம்

-

பளிச்சு -ஒளிவீச்சுக் குறிப்பு

பளு - கனம்

பாளி - ஒரு மொழி

பாளை - மடல்

பாள் - கம்பி

பிளா - ஆட்டொலி

பீளை - கண்மலம்

புளுகு - பொய்

பூளை - ஒரு செடி

சழக்கு குற்றம்

கட்டுரை வரைவியல்

சழி - சப்பையாகு

சுழி - ஏ. வளை, வட்டமிடு; பெ. வட்டம், வட்ட மயிரொழுங்கு, ஓர் எழுத்து (பிள்ளையார் சுழி)

சூழ் - ஆராய், நாற்புறமும் வளை, முற்றுகையிடு.

சோழம்-ஒரு நாடு.

தழை ஏ. செழித்தோங்கு; பெ. இலை, குழை. தாழம் தாழ்வு

தாழி பெரும்பானை

-

தாழியடித்தல் உறியடித்தல் தாழ் - ஏ. கீழாகு, இறங்கு; பெ. கதவடைகோல் தெழி -ஏ. அதட்டு

தோழன்-நண்பன்

நாழி படி, நாழிகை

நுழை -புகு, நுணுகு

பழிச்சு - புகழ், வாழ்த்து, துதி

பழு - ஏ. முதிர், கனி, மஞ்சள் நிறமாகு; பெ. ஒளிநிறம் (பழுக்காவி)

பாழி - சிறு குளம், நகர்.

பாழை - பாஷை

பாழ் - வீண், அழிவு, வெறுமை. பிழா - இறைகூடை, ஓலைத்தட்டு பீழை - துன்பம்

புழுகு -புனுகு

பூழை துவாரம், சிறுவாசல்.