உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




எழுத்தியல்

23

வடசொற்களிலும் திசைச்சொற்களிலும், முதலில் ர, ல என்னும் எழுத்துகள் வரின் அவற்றுக்கு முன் ஓர் ஏற்ற உயிர்க்குறில் வைத்தெழுதப்படும்.

எ - டு : ராமன் - இராமன். ரத்னம் - அரதனம், இரத்தினம். லாபம் - இலாபம். லோபி - உலோபி.

அயல்நாட்டுப் பெயர்களான ரசியா, லித்துவானியா முதலிய ரகர லகர யகர முதற்சொற்களும் மேற்கூறிய விதிபற்றியே இரசியா, இலித்துவானியா என எழுதப்பட வேண்டும்.

வடசொற்களின் இடையில், வேற்றுநிலை மெய்ம்மயக்கில் (அஃதாவது மெய்கள் தம் மெய் அல்லது உயிர்மெய்யோடு கூடாது பிற மெய் அல்லது உயிர்மெய்யோடு கூடிவரின்), தமிழ் முறைக்கு மாறான மெய்களின்மேல் ஓர் ஏற்ற குறில் ஏற்றப்படும்; இசைந்தவிடத்து அம் மெய்கள் இரட்டிக்கவும் பெறும்.

எ - டு : பக்வம் - பக்குவம். பத்மம் - பதுமம். புண்யம் - புண்ணியம். காவ்யம் - காவியம் அல்லது காப்பியம். வம்சம் - வமிசம்.

வடசொற்களின் (அல்லது அயற்சொற்களின்) இறுதியில் வல்லினமெய் வரின், அதன்மேல் ஓர் உகரம் ஏற்றி எழுதப்படும். அப்பொழுது அவ் வல்லினம் இரட்டும்.

எ - டு : விராட் - விராட்டு. சத் - சத்து.

சூடு, சீரகம் முதலிய தூய தென்சொற்களை ஜூடு, ஜீரகம் என்று எடுத்தொலித் தெழுதுவதும், காட்சி, மாட்சி முதலிய செந்தமிழ்ச் சொற்களைக் காக்ஷி, மாக்ஷியென்றும், அண்ணாச்சி என்பதை அண்ணாட்சி என்றும் எழுதுவதும் சிலர் வழக்கமா யிருக்கின்றது. ஆசிரியர் இதைத் திருத்துக.

காண் + சி -காட்சி. ஆட்சி.

ஆள் + சி

=

மாண் + சி = மாட்சி. மூள் + சி + சி = மூட்சி.

சில மாணவர் காட்க்ஷி, சாட்க்ஷி என மிகைபடவும் எழுதுவர்; இது பெருந் தவறு; தென்சொற்களாயின் க்ஷகரம் வரவே வராது. வடசொல்லிலுள்ள க்ஷகரம் தமிழில் டகர சகரமாகவும் இரு சகரமாகவும் எழுதப்படும்.

எ-டு: சாக்ஷி - சாட்சி, சாக்கி

திட்டாந்தம் (திருஷ்டாந்தம்), கிட்டிணன் (கிருஷ்ணன்) முதலிய வடசொற்றிரிவுகள் உரைநடைக்குச் சிறந்தனவல்ல.