உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24

கட்டுரை வரைவியல்

இஷ்டம், புஸ்தகம், திருப்தி என்ற வடசொற்களை, இஷ்ட்டம், புஸ்த்தகம், திருப்த்தி என்று மிகைபட எழுதுவது தவறாகும்; இட்டம், புத்தகம், திருத்தி என்றெழுத வேண்டும்.

தென்சொற்கள் வழக்கிலிருக்கும்போது, அவற்றுக்குப் பகரமாக (பதிலாக) வடசொற்களை வேண்டாது (அனாவசிய மாய்) வழங்குவது வழுவாகும்.

சில தென்சொற்கள் தவறாக வடசொற்களின் திரிபாகக் கருதப்படுகின்றன. திரு என்னும் தென்சொல்லே வடமொழியில் ஸ்ரீ என்று திரிந்து, பின்பு அதன் வழியாய் மீண்டும் தமிழில் சீ எனச் சிதைந்து வழங்குகின்றது. அரங்கம், காளி, சிவம், சிற்றம்பலம் ( X பேரம்பலம்), தீக்கை, வடவை, கண்ணன், மாயை, சாயை,புத்தகம் (பொத்தகம்), பொக்கசம் முதலிய எண்ணிறந்த சொற்கள் தென் சொற்களே.

9. புணர்ச்சி

சொற்களைப் புணர்த்தெழுதாவிடின் சிலவிடத்துப் பொருள் வேறுபடுவதுண்டு; அதனோடு இன்னாவோசையும் தோன்றும், இயற்கை யொலிப்பிற்கு மாறாயிருத்தலின்.

டு: அவன் உடனே = He at once.

அவனுடனே = With him.

வந்தான், ஆனால் = He came, but.

வந்தானானால் = If he came or comes.

'ஊருக்கு போனான்' என்பது இன்னாவோசை தருதல் காண்க; ஆகையால் புணர்ச்சி வேண்டியதே.

கூட்டுச் சொல்லைக் குறிக்கவும் புணர்ச்சி வேண்டும்.

எ - டு : தொகையெழுவாய்

பள்ளிக்கூடம்

புணர்கின்ற இருசொற்களில் முந்தினது நிலைமொழி என்றும், பிந்தினது வருமொழி என்றுங் கூறப்படும்.

புணர்ச்சி இயல்பாயிருப்பின் இயல்பு புணர்ச்சியென்றும், வேறுபடின் திரிபு (விகாரம்) புணர்ச்சி யென்றுங் கூறப்படும். திரிபு (வேறுபாடு) தோன்றல், திரிதல், கெடுதல் என மூவகைப்படும்.

எ டு:

கந்தன் வந்தான் -

கந்தன் + வந்தான் = இயல்பு புணர்ச்சி.

=

பால் + ஆடை = பாலாடை