உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




எழுத்தியல்

வாழை + காய் = வாழைக்காய் - தோன்றல் - கல் + மலை = கன்மலை - திரிதல் -

மரம் + வேர் = மரவேர் -கெடுதல்

திரிபு புணர்ச்சி

25

நிறுத்தக்குறிக ளிருக்குமிடத்திற் புணர்ச்சி யிராது. அவை இல்லாவிடத்துச் சொற்றொடர்களைத் திரிதற் புணர்ச்சியின்றி யெழுதலாம்; ஆனால், தோன்றற் புணர்ச்சியும் கெடுதற் புணர்ச்சியு மின்றி எழுதுதல் கூடாது.

புணர்கின்ற இரு சொற்கிடையில், 2ஆம் வேற்றுமை முதல் 7ஆம் வேற்றுமை வரை ஏதேனும் ஒரு வேற்றுமை யுருபு தொக்கேனும் வெளிப்பட்டேனும் வரின், வேற்றுமைவழிப் புணர்ச்சியென்றும், அல்லாத வழி அல்வழிப் புணர்ச்சி யென்றுங் கூறப்படும்.

i. உயிரீற்றுப் புணர்ச்சி

உயிர்மெய்யில் மெய் முன்னும் உயிர் பின்னுமாக ஈரெழுத்திருத்தலால், உயிர்மெய் முதலெல்லாம் மெய்ம் முதலென்றும், உயிர்மெய்யீறெல்லாம் உயிரீறென்றும் தெரிந்து கொள்க. 1) உயிரும் உயிரும் புணர்தல்

உயிரோ டுயிர் புணரும்போது, நிலைமொழியீற்று இ, ஈ, ஐ என்னும் உயிர்களின் பின் யகர மெய்யும், ஏனை யுயிர்களின் பின் வகர மெய்யும், ஏகாரத்தின் பின் இவ் விரு மெய்களும் உடம்படு மெய்யாகத் தோன்றும். (உடம்படுத்தல் - இசைத்தல்).

எ-டு: வாழை + இலை = வாழையிலை (ஐ + இ) - ய்

திரு + அடி = திருவடி (உ + அ) - வ்

=

ஒரே + இடம் = ஒரேயிடம் (ஏ + இ) - ய்

-

சே + அடி = சேவடி (ஏ + அ) வ்

இப் புணர்ச்சியை அறிதற்கு, ஆவன்னா, ஈயன்னா, ஊவன்னா, ஏயன்னா, ஐயன்னா, ஓவன்னா, ஔவன்னா என்னும் பண்டை யெழுத்துச் சாரியையைக் கவனிக்க. ‘யன்னா' வருமெழுத்தின் பின் யகர மெய்யும், ‘வன்னா’ வருமெழுத்தின் பின் வகர மெய்யும் உடம்படு மெய்யாகுமென்றறிக. ஒரு நெடில் போன்றே அதன் குறிலும் புணரும்.

ஏகாரம் ஓரெழுத்துச் சொல்லாயிருக்கும் போதுதான் வகரவுடம் படுமெய் பெறும்; அதுவும் சிறுபான்மையே.