உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26

கட்டுரை வரைவியல்

ஒருமாரை (ஒருமா + அரை), குளாம்பல் (குளம் + ஆம்பல்), மராடி (மரம் + அடி), பராரை (பரு + அரை) முதலியன மரூஉப் புணர்ச்சியாம்.

ப்

2) சுட்டெழுத்தும் வினாவெழுத்தும் நாற்கணத்துடன் புணர்தல்

(வன்கணம், மென்கணம், இடைக்கணம், உயிர்க்கணம் என்பன நாற்கணமாகும். கணம் - இனம், கூட்டம்.)

சுட்டெழுத்துக்களும் எகர வினாவெழுத்தும் உயிரோடும் இடையின மெய்யோடும் புணரின், இடையில் வகரந் தோன்றும்; உயிரோடு புணரின், அவ் வகரம் இரட்டும்; வல்லின மெல்லின மெய்களோடு புணரின் அவ்வம் மெய்கள் மிகும்.

அ + உயிர் = அவ்வுயிர்

அ + யானை = அவ்யானை

அ + ரகரம் - அவ்ரகரம் அ + லகரம் - அவ்லகரம் அ + வழி = அவ்வழி

அ + ழகரம் = அவ்ழகரம் +

அ + ளகரம் = அவ்ளகரம்

- உயிர்

டையின மெய்

அ + காலம் = அக்காலம்

வல்லின மெய்

அ + மனிதன் = அம்மனிதன்

மெல்லின மெய்

இங்ஙனமே பிறவும்.

னகரவீறு கெட்டு அகர வீறாய் நிற்கும் உயர்திணைப் பெயர்கள் உயிர்முதற் சிறப்புப் பெயரோடு புணரின், அவ் அகரவீறு கெடும்.

எ - டு : அரங்க + ஆச்சாரி = அரங்காச்சாரி.

சாமிநாத + ஐயர் = சாமிநாதையர்.

அது என்னுஞ் சொல் தனித்து வரினும் சொல்லீறாய் வரினும் ஏகாரத்தோடு புணரும்போது,

இருவகையாய்ப் புணரும்.

உகரங்கெட்டும்

எ - டு : அதே, அதுவே; அழைப்பதே, அழைப்பதுவே.

கெடாதும்

குறு, நடு, நெடு, புது, சிறு என்ற சொற்கள் உயிரொடு புணரும்போது, அவற்றின் ஈற்றுயிரேறிய மெய் இரட்டும்.

எ-டு டு : குற்றுயிர், நட்டாறு, நெட்டுயிர்ப்பு, புத்தூர், சிற்றன்னை. நடுவூர் (நடு + வூர்). சீறடி (சிறு + அடி). சிறியிலை (சிறு + இலை) என்ற வழக்கும் சிறுபான்மை யுண்டு.