உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




எழுத்தியல்

3) எண்ணுப்பெயர்கள் பிற சொற்களுடன் புணர்தல்

எண்ணுப்பெயர்கள் பிற சொற்களுடன் புணரும்போது :

27

ஒன்று என்பது உயிர்க்குமுன் ஓர் என்றும், மெய்க்குமுன் ஒரு என்றும் திரியும்.

எ-டு : ஓர் ஊர், ஒரு மாந்தன்.

ஓர் என்பது மெய் முன்னும் வருவது செய்யுட்கு ஏற்கும்; உரைநடைக்கு ஏற்காது.

இரண்டு என்பது உயிர்க்குமுன் ஈர் என்றும் மெய்க்கு முன் இரு என்றும் திரியும்.

எ - டு : ஈர் ஆயிரம், இரு திணை.

மூன்று என்பது உயிர்க்கு முன்னும் இடையின மெய்க்கு முன்னும் மூ என்றும், பிற மெய்கட்கு முன் மு என்றும் திரியும்.

எ-டு : மூவுலகு, மூவேந்தர்; முக்காலம், மும்மழை.

நான்கு என்பது நால் என்று திரியும்.

எ - டு : நாலாள், நாற்பொருள்.

ஐந்து என்பது ஐ என்று திரியும்.

எ-டு : ஐயாயிரம், ஐம்பூதம், ஐந்நூறு.

ஆறு என்பது உயிர்க்குமுன் இயல்பாயிருக்கும்; மெய்க்குமுன் குறுகும்.

எ-டு : ஆறாயிரம், அறுகால்.

ஏழு என்பது உயிர்க்குமுன் ஏழ் என்றும், மெய்க்கு முன் ஏழ், எழு என்றும் திரியும்.

எ - டு : ஏழுலகு, ஏழ்தெங்கநாடு, எழுபிறவி.

எட்டு என்பது எண் என்று திரியும்.

எ - டு : எண்ணாயிரம், எண்குணம்.

இரண்டு முதல் எட்டு வரையுள்ள எண்ணுப்பெயர்கள்இரண்டு பேர் மூன்று நாள் எனத் திரியாதும் பெயரைத் தழுவும்; ஆயினும் அஃது அத்துணைச்சிறப்பின்று.

முதற் பத்தெண்ணுப் பெயர்களும் பகிர்வுப் (Distributive) பொருளில் இரட்டும்போது, ஒவ்வொன்று, இவ்விரண்டு, மும்