உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




எழுத்தியல்

1) ண், ம், ல், ள், ன் என்ற மெய்கள்

29

ண், ம், ல், ள், ன் என்ற மெய்கள் வல்லினத்தோடு புணரின், இரு வழியிலும் பெரும்பாலும் பின்வருமாறு திரியும்.

எண் எழுத்து

எடுத்துக்காட்டு

திரிபு

1

ண்

ட்

மண் + கலம் = மட்கலம்.

2

ம்

ங்

மரம் + குறிது = மரங்குறிது.

ஞ்

3

4

ள்

7. 8. G.

ந்

ற்

ட்

5

ன்

ற்

மரம் + சிறிது = மரஞ்சிறிது.

மரம் + தழைக்கும் = மரந்தழைக்கும்.

கல் + பலகை = கற்பலகை.

கள் + குடம் = கட்குடம்.

பொன் + பணி = பொற்பணி.

ண், ள் என்னும் மெய்கள் தகரத்தொடு புணர்ந்து டகரமாகும்போது, அத் தகரமும் டகரமாகும்.

எ - டு : மண் + தாழி = மட்டாழி, மண்டாழி.

முள் + தாழை = முட்டாழை.

மட்தாழி, முட்தாழை என்று எழுதுவது தவறு.

விற்போர் (வில் + போர்) என்பதை வில்போர் என்றெழுதுவது பெரும்பிழையன்று; ஆனால், வில்ப்போர் என்றெழுதுவது பெரும் பிழையாம்.

ல், ன் என்னும் மெய்கள் தகரத்தோடு புணர்ந்து றகரமாகும் போது அத் தகரமும் றகரமாகும்.

=

எ - டு : கல் + தாழை = கற்றாழை.

பொன் + தோடு = பொற்றோடு.

கற்தாழை, பொற்தோடு என்றெழுதுவது தவறு.

நகரம் ண், ள் என்ற மெய்களுக்குப் பின்வரின் ணகரமாகவும், ன், ல் என்ற மெய்களுக்குப் பின்வரின் னகரமாகவும் இரு வழியிலும் திரியும்.

ளகரத்தோடு புணர்ந்து நகரம் னகரமாகும்போது, அவ்லகரமும்

னகரமாகும்.

எ - டு : கண் + நீர் = கண்ணீர் - ண் + ந = ண்ண

கள் + நீர் = கண்ணீர் - ள் + ந = ண்ண

பொன் + நகை = பொன்னகைன் + ந = ன்ன

கல் + நகை = கன்னகை - ல் + ந = ன்ன