உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30

கட்டுரை வரைவியல்

மேற்கூறிய புணர்ச்சிகளுள் நிலைமொழி யீறு தனிக்குறிலை யடுத்த மெய்யாயிருந்தால்தான், புணர்ச்சியால் தோன்றிய இரு ணகரமும் இரு னகரமும் நிற்கும்; நெடிலை அல்லது பலவெழுத்து களையடுத்த மெய்யாயின் ஒரு ணகரமும் ஒரு னகரமும் கெடும்.

எ - டு : தூண் + நெடிது = தூணெடிது

ஆள் + நலம் = ஆணலம்

பரண் + நீளம் = பரணீளம்

பனங்கள் + நன்று = பனங்கணன்று

ஒரு ணகரம் கெட்டது.

தந்தை பெயரும் மகன் பெயரும் முறையே நிலைமொழியும் வருமொழியுமாய் நின்று புணரின், நிலைமொழியீற்று னகரமெய் வருமொழி முதலிலுள்ள வல்லினத்திற்கேற்ற மெல்லினமாய்த் திரியும். எ-டு: கீரங்கொற்றன் - கீரன்மகனாய கொற்றன்.

பிட்டஞ்சாத்தன் - பிட்டன் மகனாகிய சாத்தன்.

ஒருவரைக் குறிக்கும் உயர்திணைப் பெயர்களும் சிறுபான்மை இப் புணர்ச்சி பெறும்.

எ - டு : அரசஞ்சண்முகனார்

இராமச்சந்திரஞ்செட்டியார்

கான் + நாடு = கானாடு

=

நால் + நிலம் = நானிலம்

மகன் + நல்லன் = மகனல்லன்

முதல் + நாள் - முதனாள்

ஒரு னகரம் கெட்டது.

‘ம்’ என்ற மெய் நகரத்தோடு புணரும்போது, தான் தனிக்குறிலை யடுத்து மெய்யாயின் நகரமாகத் திரியும்; நெடிலை அல்லது பல வெழுத்துகளை யடுத்த மெய்யாயின் கெடும்.

டு: வெம் + நீர் = வெந்நீர் - திரிதல்.

வேம் + நீர் = வேநீர்.

பரம் + நெறி = பரநெறி = கெடுதல்

குறிப்பு : தந்நகரமும் றன்னகரமும் ஏறத்தாழ ஒன்றுபோல் ஒலிப்பதால் அவற்றை ஒன்றிற்கு இன்னொன்றாக எழுதக் கூடாது;எழுதின் பொருள் மாறும்.

எ-டு : முந்நாள் - மூன்று + நாள்; முன்னாள் - முன் + நாள்; தந்நலம் - தம் + நலம்; தன்னலம் - தன் + நலம்