உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




எழுத்தியல்

2) தனிக்குறில் யகரமெய்யும் தனி ஐகாரமும்

31

தனிக்குறிலை யடுத்த யகர மெய்யின் பின்னும் தனி ஐகாரத்தின் பின்னும் வரும் மெல்லினம் மிகும்.

எ - டு : செய் + நன்றி = செய்ந்நன்றி, கை + மாறு = கைம்மாறு.

எ-டு

குறிப்பு இலக்கண அறிவும் உணர்ச்சியும் இல்லாத சில தான்றோன்றிகள், இக்காலத்தில் லகர ளகர மெய்கட்குப்பின் வலிமிகுத்து, கல்க்கிறான், பால்க்குடம், கேள்க்கிறோம், தூள்ப்பாக்கு என எழுதுகின்றனர். இதை ஆசிரியர் வலிபெறக் கண்டித்து அறவே ஒழிப்பார்களாக. பாற்குடம் வாட்போர் என்பவற்றைப் பால்குடம் வாள்போர் என எழுதினும் பெருங்குற்றமில்லை. கற்கிறான் - கேட்கிறோம் என்பவற்றைக் கல்க்கிறான், கேள்க்கிறோம் என எழுதுவது தமிழைக் கெடுக்கும் கழிபெருங் குற்றமாகும்.

10. வலிமிகும் இடங்கள்

பின்வரு மிடங்களில் வருமொழி முதலில் வரும் வல்லினம் கட்டாயம் மிகும்.

1) 2ஆம் வேற்றுமைக்கும் 4ஆம் வேற்றுமைக்கும் பின் (இங்கு வேற்றுமை யென்றது வேற்றுமை விரியை.)

எ-டு:

எ - டு : பாடத்தைப் படித்தான்; ஊருக்குப் போனான்.

2ஆம், 4ஆம் வேற்றுமைத் தொகையாயின் மிகாது.

எ - டு : உரை கண்டான் (2ஆம் வே.), ஊர் போனான் (4ஆம் வே.)

பாடசாலைக்கு அனுப்பினான் என்று வருமொழி முதலில் வலிவராவிடத்து வலியிட்டெழுதுவது பெருந்தவறு.

2) நிகழ்கால வினையெச்சத்திற்குப் பின்னும் (After the Infinitive Mood) அகரவீற்றுக் குறிப்பு வினையெச்சத்தின் பின்னும்.

எ - டு : செய்யப் போனான் - நி.கா. வி.எ.

வலியச் சொன்னான்; விரைவாகப் பேசினான் - கு.வி.எ.

3) யகர மெய்யீற்று இறந்தகால வினையெச்சங் (Past Participle) கட்குப் பின்னும், குறிப்பு வினையெச்சத்திற்குப் பின்னும்.

எ டு : போய்ப் படித்தான், ஆய்ப் போயிற்று - இ.கா.வி.எ. விரைவாய்ப் போனான் - கு.வி.எ.

ஆய் என்பது ஆ என்னும் பகுதியடியாய்ப் பிறந்த இறந்தகால வினையெச்சம்.