உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




32

கட்டுரை வரைவியல்

4) தான, தத்த, தாத்த, தனத்த என்னும் வண்ண வாய்பாட்டு இறந்தகால வினையெச்சங்கட்குப்பின்.

தனிநெடிலடுத்த குறிலாய் வருவது ‘தான' வாய்பாடு.

எ - டு : ஓடிப்போனான்.

,

இரு குறிலுக்கிடையில் வல்லின மெய் வருவது 'தத்த வாய்பாடு. (தமிழில் ஒரு சொல்லில் வல்லின மெய்க்குப் பின் வரும் எழுத்தெல்லாம் வல்லின உயிர்மெய்யாகவே யிருக்கும்).

எ - டு : தட்டிச்சொன்னான்; விட்டுக்கொடுத்தான்.

தனிநெடிற்குங் குறிலுக்கு மிடையில் வல்லினமெய் வருவது

‘தாத்த' வாய்பாடு.

டு 8 சேர்த்துக்கொள், காத்துக்கொண்டான், வாழ்த்திக்கொடு, மாற்றிப்பேசு.

குறிலிணைக்குங் குறிற்கு மிடையில் வல்லினமெய் வருவது 'தனத்த வாய்பாடு. (இணை இரண்டு; சோடு.)

,

எ - டு : எடுத்துச்சொல், வருத்திப்பார்.

இங்குக்கூறப்பட்ட வாய்பாட்டுச் சொற்கள் பிற சொற்களோடு கூடி நிற்பினும் வலிமிகல் தவறா. இஃது அடுத்த விதிக்கும் ஒக்கும்.

5) இகர ஈற்றுத் தனன, தந்த, தாந்த, தனந்த என்னும் வண்ண வாய்பாட்டு இறந்தகால வினையெச்சங்கட்குப்பின்.

மூன்று குறில் அடுத்தடுத்து வருவது 'தன்ன' வாய்பாடு.

எ - டு : அருளிச்செய்தான், எழுதிக்கொடுத்தான்.

இரு குறிற்கிடையில் மெல்லின மெய்வரின் ‘தந்த வாய்பாடாம். (ஈற்றுக்குறில் வல்லின உயர்மெய்யாகும்.)

எ - டு : மங்கிப்போனது.

ஒரு தனி நெடிற்கும் வல்லின உயிர்மெய்க் குறிலுக்கு மிடையில் மெல்லின மெய்வரின் ‘தாந்த' வாய்பாடாம்.

எ - டு : வாங்கிக்கொண்டான்.

ஒரு குறிலிணைக்கும் வல்லின உயிர்மெய்க் குறிலுக்கு மிடையில் மெல்லின மெய்வரின் 'தனந்த வாய்பாடாம்.

எ - டு : விரும்பிப் படித்தான்.