உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




எழுத்தியல்

33

குறிப்பு : இங்குக் கூறப்பட்டுள்ள வண்ண வாய்பாடுகளைத் திருப்புகழ் வாயிலாய் ஆசிரியர் மாணவர்க்குத் தெளிவாக்குக.

6) அ, இ, உ, எ; அந்த, இந்த, உந்த, எந்த; அப்படி, இப்படி, உப்படி, எப்படி என்னும் சுட்டுவினாச் சொற்கட்குப் பின்.

எ - டு : அப்பையன், அந்தப் பையன், அப்படிச் சொன்னான்.

அங்கு, இங்கு, உங்கு, எங்கு; ஆங்கு, ஈங்கு, ஊங்கு, யாங்கு; ஆண்டு, ஈண்டு, யாண்டு என்னும் சுட்டு வினாச் சொற்கட்குப் பின்னும் வலிமிகும்.

எ - டு : அங்குச் சென்றான், ஈண்டுத் தந்தான், யாண்டுப் பெற்றான். அங்கு, அப்படி, ஆங்கு, ஆண்டு முதலியவை இறுதியில் ஏகாரம் பெறின் என்றும் இயல்பாம்.

-

டு : அங்கே, அப்படியே, ஆங்கே, ஆண்டே -போனான்.

படி என்னுஞ் சொல் சுட்டுவினாவெழுத்துகளையடுத்து வராது பெயரெச்சங்களை யடுத்துவரின் இயல்பாம்.

எ - டு : சொன்னபடி செய், சொல்லுகிறபடி செய், சொல்லும்படி செய்.

7) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்ச வினையெச்சங்கட்கும், ‘செய்யா’ என்னும் வாய்பாட்டு வினையெச்சத்திற்கும் பின்.

-

டு: உண்ணாக்குதிரை - ஈ. எ. பெ. எ.

படியாச் சென்றான் - ஈ. எ. வி. எ.

பெய்யாக் கொடுக்கும் - செ. வ. வி. எ.

8) மகரஈறு கெட்டுக் குறிப்புப் பெயரெச்சமாய், நிற்கும் பண்புப் பெயர்கட்குப்பின் (பண்புத்தொகை).

எ - டு : மரப்பலகை, வட்டக்கல்.

9) ட, ற இரட்டித்த நெடிற்றொடர் உயிர்த்தொடர்க் குற்றியலுகரச் சொற்கட்குப் பின்னும், வன்றொடர் மென்றொடர்க் குற்றியலுகரச் சொற்கள் நிலைமொழியா யமைந்த தொகைச் சொற்களிலும்.

எ-டு : ஆட்டுக்கால், முரட்டுப்பயல், கிணற்றுத்தவளை, ஆற்றுப்பாய்ச்சல், நூற்றுக்கணக்கு.

கேடுகாலம், பேறுகாலம், வீடுபேறு, நாடுகிழவோன் முதலிய தொடர்களில் ட, ற இரட்டாமையின் வலி மிகவில்லை.

வன்றொடர் : எ டு : பட்டுத்துணி, கொக்குக்கால்,

பாட்டுக்கூட்டம், கிழக்குத்திசை