உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




34

கட்டுரை வரைவியல்

மென்றொடர்: எ-டு: குண்டுக்கல், பாம்புத்தோல், கன்றுக்குட்டி,

மருந்துப்பை.

சில மென்றொடர்க் குற்றியலுகரச் சொற்கள் புணர்ச்சியில் வன்றொடராவதுமுண்டு.

எ எ - டு : பாப்புத்தோல், மருத்துப்பை.

ஆறு என்னும் பெயர் எண்ணைக் குறிப்பின் வேற்றுமையினும் இரட்டாது இயல்பாய்ப் புணரும்; பிறவற்றைக் குறிப்பின் இரட்டும்.

-

டு

டு : ஆறில் ஐந்தைக் கழி - எண்ணுப்பொருள்.

ஆற்றில் இறங்கு, அவ்வாற்றால் - பிறபொருள்.

10) புணர்ச்சியில் வன்றொடராகி 'அம்’ சாரியை பெறாத மென்றொடர்க் குற்றியலுகரங்கட்குப்பின்.

எ - டு : இருப்புப்பாதை.

11) ஐகாரச்சாரியை பெற்ற குற்றியலுகரச் சொற்கட்குப்பின்.

எ-டு: பண்டைக்காலம்,

அற்றைக்கூலி,

ஒற்றைப்பனை,

இரட்டைப்பிள்ளை.

12) அத்து இற்றுச் சாரியைப் பெயர்கட்குப்பின்.

எ - டு : பட்டினத்துப் பிள்ளையார், பதிற்றுப்பத்து.

13) மு (பெ. எ.), எட்டு, பத்து என்னும் எண்ணுப்பெயர்கட்குப்பின்.

எ - டு : முக்கால், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு.

14) உயிரையும் யரழ மெய்களையும் இறுதியாகவுடைய நிலைமொழிகளுள்ள தொகைச்சொற் (compound words)களில்,

எ-டு : கிளிக்கூண்டு, இடைச்சேரி, ஏப்புழை (ஏ - அம்பு), வாய்க்கால், ஊர்க்குருவி, தமிழ்ச்சங்கம்.

11. வலிமிகா இடங்கள்

1) 3ஆம் வேற்றுமை ஒடு, ஓடு என்னும் உருபுகட்குப்பின்.

எ - டு : முருகனோடு பேசினான்.

2) 6ஆம் வேற்றுமைக்குப் பின்.

எ - டு : கண்ணகி கற்பு, என் கால்கள் - வேற்றுமைத் தொகை. எனது புத்தகம், என்னுடைய கை - வேற்றுமை விரி.