உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2

சொல்லியல் - ETYMOLOGY

1. எண்ணடி உயர்திணைப்பெயர்

ஒருவன், ஒருத்தன் (ஆண்பால்), ஒருத்தி (பெண்பால்), ஒருவர் (பொதுப்பால்) என்பன ஒன்று என்னும் ஒருமை எண்ணடியாய்ப் பிறந்த உயர்திணைப் பெயர்களாகும்.

ஒருவள் என்பது தவறு.

இருவர், மூவர், நால்வர், ஐவர், அறுவர், எழுவர், எண்மர், ஒன்பதின்மர், பதின்மர், பதினொருவர், பன்னிருவர், பதின்மூவர் அல்லது பன்மூவர், பத்தொன்பதின்மர், இருபதின்மர், இருபத்தொரு வர், தொண்ணூற்றுவர், நூற்றுவர், நூற்றொருவர், நூற்றுப்பதின்மர், நூற்றுத்தொண்ணூற்றுவர், தொள்ளாயிரவர், ஆயிரவர், பதினாயிர வர், இலக்கவர், கோடியர் என்பன, இரண்டு முதலிய பன்மை யெண்ணடியாகப் பிறந்த உயர்திணைப் பெயர்களாகும்.

இரண்டுபேர், மூன்றுபேர், இருபேர், முப்பேர் என்பவற் றினும் இருவர், மூவர் என்பன சிறந்தனவாகும்.

இருபத்தி, நூத்தி என்பன இருபத்து, நூற்று என்றிருத்தல் வேண்டும்.

2. இருபாற் பெயர்கள்

i. உயர்திணை - மக்கட் பெயர்

ஆண்பால்

அந்தணன்

அமைச்சன்

அரசன்

பெண்பால்

அந்தணி அமைச்சி

அரசி, தேவி