உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொல்லியல்

மாணவன்

மாணாக்கன்

வணிகன்

வாலன்(வ.),

வாலிபன், வாலியோன்

வீரன்(வ.)

வெள்ளாளள்

வேளாளன்

வேண்மகன்

மாணவி

மாணாக்கி வணிகச்சி

வாலை

வீரி

வெள்ளாட்டி

வேளாட்டி

வேண்மகள்

39

திருமதி என்பது ஸ்ரீமத் (ஸ்ரீமான்) என்னும் ஆண்பாலின் பெண்பாலான ஸ்ரீமதி என்பதன் திரிபாகும்.

குருவிக்காரிச்சி, கொல்லைக்காரிச்சி, வெள்ளாட்டிச்சி முதலிய

பெண்பாற் பெயர்கள் ஈறுபெற்றமையின் வழுவாகும்.

ஒரு

பயனுமின்றி

இருபெண்பால்

பிள்ளை என்னும் பெயர்வடார்க்காட்டு வட்டத்தில் பையனையும், தென்னாட்டில் பெண்பிள்ளையையும் குறிக்கிறது. இது வழக்குப் பற்றியது.

பெண்மையை விரும்பும் ஆண் பேடி என்றும், ஆண்மையை விரும்பும் பெண் பேடன் என்றும், ஆண்மையையேனும் பெண்மையையேனும் விரும்பாத ஆண் அல்லது பெண் பேடு என்றும், ஆணும் பெண்ணுமல்லாதவர் அலி என்றும் கூறப்படுவர்.

மகன், மகள் என்னும் முறைப்பெயர்களின் பன்மையை ஆண்மக்கள், பெண்மக்கள் என்றேனும், புதல்வர், புதல்வியர் என்றேனும் குறித்தல் வேண்டும். மகார் என்பது ஆண்மக்களையும் மகளிர் என்பது பொதுவாய்ப் பெண்களையும் குறிக்கும். மகன்கள், மகள்கள் என்றெழுதுவது தவறாம்.

ii. தெய்வப் பெயர்

ஆண்பால்

இந்திரன்(வ.) காமன்

பெண்பால்

இந்திராணி

இரதி (வ.)

சிவம், சிவன்

சிவை

திருமால்

தேவன்

நான்முகன் (பிரமன்)

தேவி

திருமகள்

நாமகள், கலைமகள்(சரஸ்வதி)