உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




40

நாராயணன்(வ.)

பரன்

கட்டுரை வரைவியல்

நாராயணி

பரை

தெய்வம், தேவதை, தேவு என்பன பொதுப்பால்.

iii. அஃறிணைப் பெயர்

ஆண்பால்

பெண்பால்

பொதுப்பால்

அலவன்

அன்னச்சேவல்

எருமைக்கடா

பெடை நண்டு

நண்டு

அன்னப்பெடை

அன்னம்

எருமைக்கிடாரி

எருமை

புலியொருத்தல்

புலிப்பிணா

புலி

கடா, தகர்

மறி

கடுவன்

மந்தி

கலை, இரலை

பிணை

களிறு

பிடி

ஆடு

குரங்கு மான்

யானை

காளை

ஆ, ஆன்

பெற்றம், மாடு

கிடாரிக்கன்று பெட்டைக்கோழி

கன்று

கோழி

சேங்கன்று சேவல்

இங்குக் கூறிய அஃறிணை யிருபாற் பாகுபாடு வழக்குப் பற்றியது. இலக்கணம் பற்றியதன்று.

இங்குக் கூறாத பிற அஃறிணை உயிர் (பிராணி) கட்கெல்லாம் ஆண்பாற்கு ஆண் என்பதும், பெண்பாற்குப் பெண் என்பதும் அடையாகச் சேர்க்கப்படும். பெண் என்பது பிணா, பிணவு, பிணவல், பிணை, பெட்டை, பெடை, பேடு, பேடை என்றும் திரியும். பிணாமுதலிய நான்கும் விலங்கிற்கும், பெடை முதலிய மூன்றும் பறவைக்கும் பெரும்பாலும் உரியவாகும்; பெட்டை என்பது இரு திணைக்கும் பொது.

மறி என்பது உலக வழக்கில் கழுதை குதிரைகளின் பெண் பாலை உணர்த்தும். ஏறு அல்லது ஏற்றை என்பது நூல் வழக்கில் அரிமா (சிங்கம்), புலி, மாடு முதலிய ஆற்றலுள்ள விலங்குகளின் ஆண்பாலை யுணர்த்தும். புலி, அரிமா, நாய், பன்றி முதலியவற்றின் பெண்பால் பிணா, பிணவு, பிணவல் என்று கூறப்படும்.

அன்னம் என்னும் வடசொற்கு, நேரான தென்சொற்கள் எகினம் (எகின்), ஓதிமம் என்பன.