உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொல்லியல்

3) இழிவடைந்த சொற்கள் (Degraded words)

41

சில சொற்கள் வழக்குப்பற்றியும், மக்களின் ஒழுக்கக்கேடு பற்றியும் இழிவடைந்துள்ளன. அவற்றை விலக்கல் வேண்டும்.

டு:

சொல்

தாசி (வ.)

தேவடியாள்

சிறுக்கி

முன்னைப்பொருள்

இற்றைப் பொருள்

கடவுளடியாள்

வேசி, விலைமகள்

கடவுளடியாள்

வேசி, விலைமகள்

சிறுமி

கீழ்மகள்

பயல்

பையன்

கீழ்மகன்

சேரி

இடையர் குடியிருப்பு

தாழ்ந்தோர் குடியிருப்பு

பறை

தோற் கருவி

தாழ்ந்தோர் மேளம்

4) உயர்வடைந்த சொற்கள் (Elevated Words)

சில சொற்கள் நாளடைவில் தம் தீப்பொருள் மாறி நற்பொருள் பெற்றுள்ளன. அவற்றை நற்பொருளிற் கொள்ளவேண்டும்.

எ-டு: சொல்

முன்னைப்பொருள்

களி

குடிவெறி

இற்றைப்பொருள் மகிழ்ச்சி

5) பொருள் திரிபு (Change in Meaning)

சில சொற்கள் தாம் முதலிற் குறித்த பொருளையிழந்து இன்று வேறு பொருள் குறிக்கின்றன. அவற்றைப் புதுப் பொருளிலேயே வழங்கவேண்டும்.

எ-டு:

சொல்

முன்னைப்பொருள்

எண்ணெய்

நல்லெண்ணெய்

இற்றைப்பொருள் எண்ணெய்ப் பொது

(எள் + நெய் )

பரதேசி (வ.)

அயல்நாட்டான்

பண்டாரம்

சில பெயர்கள் ஆண்பாலில் ஒருபொருளும், பெண்பாலில் மற்றொரு பொருளு முணர்த்தும்; அவற்றைக் கவனித்தல் வேண்டும்.

எ-டு: தோழன் - தோழி,

விலைமகன் - விலைமகள்,

பத்தன் - பத்தினி, தாசன் - தாசி.

சில துணைவினைகள் உடன்பாட்டில் தம் பழம்பொருளை யும், எதிர்மறையில் அதை இழந்தும் இழவாதும் ஒரு புதுப் பொருளையும் உணர்த்துவனவாகும்.