உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




42

கட்டுரை வரைவியல்

-

டு:

உடன்பாடு

எதிர்மறை

செய்யமாட்டுவேன்-I can do செய்யமாட்டேன்–| will not do

செய்யக்கூடும் - can do

செய்ய முடியும் can do

செய்யப்படும் - will be done

(should be done - வழக்கு)

செய்யக்கூடாது - should not do செய்ய முடியாது - cannot do,

shall not do

செய்யப்படாது -will not be done, should not do, or should not

be done.

படாது என்னும் துணைவினை விலக்குப் (prohibition) பொருளில் எல்லாப் பாற்கும் இடத்திற்கும் ஏற்கும்; நிகழாமை அல்லது கூடாமைப் பொருளில் படர்க்கை ஒன்றன்பாற்குமட்டும் ஏற்கும்.

எ - டு : 1) அவன், அவள், அவர், அது, அவை = (Impersonal)

ங்கே வரப்படாது

2) அது அகப்படாது = It cannot be got or caught. அது சொல்லப்படாது = |t will not be told.

நன்மைக்கும் தீமைக்கும் பொதுவான சில குணப்பெயர்கள் நாளடைவில் பொதுமை நீங்கி, நல்லது அல்லது தீயதைமட்டும் உணர்த்தும்.

எ - டு : மணம், வாசனை (வ.) - நல்ல வாசனை

நாற்றம், வீச்சம் - தீய வாசனை

6) இகழ்ச்சிச் சொற்கள் (Ridiculous Terms)

கிழம், கிழடு, முதலி, வாத்தி முதலிய இகழ்ச்சிச் சொற்களை நீக்கிக் கிழவன், கிழவி, முதலியார், வாத்தியார் முதலிய சிறந்த வடிவங்களைக் கொள்ளவேண்டும்.

7) இழிசொற்கள் (Slang Words)

அன்னா! (அந்தா!), ஆச்சு, கண்ணாலம், தவக்களை, தவக்கா, பீச்சங்காய், பெண்சாதி, மச்சான், மச்சாவி, வரச்சே, வரச்சில, வெஞ்சணம் முதலிய இழிசொற்களை நீக்கிவிட்டு உயர்சொற்களை வழங்க வேண்டும்.