உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

கட்டுரை வரைவியல்

வந்தாக்கா போனாக்கா முதலியன வந்தக்கால் போனக்கால் முதலியனவாகவும், வரச்சே போகச்சே முதலியன வருகையிலே போகையிலே முதலியனவாகவும், எழுதப்பெறல் வேண்டும்.

சில முறைப்பெயர்களின் விளிவேற்றுமை வடிவங்கள் முதல் வேற்றுமைக்குப் பதிலாக வழங்கிவருகின்றன. அவற்றுட் சில வழக்கு நோக்கி அமைக்கப்படும். ஆனால், அவற்றுக்குமேல் ளகர ஒற்றுச் சேர்ப்பதும் ரகர வொற்றுச் சேர்ப்பதும் வழுவாகும். உயர்வுப் பன்மைவிகுதி முதல் வேற்றுமையோடுதான் சேரும்.

எ-டு: 1ஆம் வே.

8ஆவே.

பிழை

திருத்தம்

ஐயன்

ஐயா

அப்பன்

அப்பா

அப்பார்

அப்பனார்

அம்மை

அம்மா

அம்மாள்

அண்ணன்

அண்ணா

அண்ணார் அண்ணனார்

அக்கை

அக்கா

அக்காள்

தங்கை

தங்கா

தங்காள்

மாமன்

மாமா

விளிவேற்றுமை வடிவுகளுள், தங்கா என்பது தவறு; உயர்வு கருதும்போது அப்பா அம்மா அண்ணா அக்காமாமா என்பனவற்றையும், அப்பனார் அம்மையார் அண்ணனார் அக்கையார் தங்கையார் மாமனார் என்று வழங்குவதே சிறந்தது.

அண்ணன்காரன் அக்காக்காரி என்று முறைப்பெயர்களுடன் காரன் காரி ஈறுகளைச் சேர்ப்பதும், வரப்பட்ட வரப்பட்ட போகப்பட்ட என் று செயப்படுபொருள் குன்றிய வினைகளைச் செயப்பாட்டு வினை களாகக் கூறுவதும், என்னங்க, வந்தானுங்க என முன்னிலைக்குரிய ‘உங்கள்’ (உம் + கள்) விகுதியைப் படர்க்கைச் சொல்லொடு சேர்த்துக் கூறுவதும், வந்தக்கால் என்பதை வந்தாக்கா என்பதும், சிறுமியைப் பெட்டைப்பசன் பெண்மகன் என்பதும்,தப்பிக்கொண்டான் என்னும் பொருளில் தப்பித்துக்கொண்டான் என்பதும், சும்மாவிரு என்னும் பொருளில் பேசாமலிரு என்று சொல்லுவதும் வழுவாகும்.

9) மிகைபடு சொற்கள் (Redundancy)

சில சொற்றொடர்கள் உலக வழக்கில் மிகைபடக் கூறலாக வழங்கிவருகின்றன.