உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொல்லியல்

போகடு, போடு

மகாமகம், மாமாங்கம் மகிழ்நன், மகிணன்

மங்கலியம், மாங்கலியம் மடம், மடமை

மத்திமம், மத்திபம் (வ.) மத்தியானம், மதியம் (வ.)

மனம், மனது, மனசு மனிதன், மனுடன்,

மானிடம் (வ.)

மன்று, மன்றம்

மார், மார்பு, மருமம் முத்து, முத்தம் முழவு, முழா, முழவம் முழுது, முழுவது, முழுவன், முழுமை

முன்னில், முன்றில், முற்றம் முந்தாநாள், மூன்றாநாள் முனி, முனை

நுனி, நுனை, நுதி, கொனை வங்கம், வங்காளம்

வலி, வலிமை, வலுவு,

வன்மை, பலம்

வலாட்டியன், பலாட்டியன் வயிரம், வைரம்

வல்லமை, வல்லபம்

வழமை, வழக்கம்

வளை, வளைவி, வளையல் வாணிகம், வாணிபம், வணிகம்

வாய்பாடு, வாய்ப்பாடு

வாவல், வெளவால்

வான், வானம்

(விஷ்ணு) விட்டுணு, விண்டு வித்து, விதை, விரை விழா, விழவு

விளா, விளவு, வெள்ளில் வெள்ளை, வெளுப்பு, வெண்மை

வேடன், வேடுவன்,

வேட்டுவன்

வேட்டம், வேட்டை

வேண்டாம், வேண்டா

57

குன்றம் மதியம் என்பன பருமைப் பொருளீறும் (Aug, sfx-ஆம்) விட்டில் புட்டில் என்பன குறுமைப் பொருளீறும் (Dim, sfx-இல்) பெற்றவையாம். பையல், பைதல்.

ஆல், ஆன் (3); ஒடு, ஓடு, உடன் (3); இல், இன் (5) என்பன வேற்றுமையுருபுகள்.

தொழிற்பெயர்கள் மாறும் போது வேறு வடிவாகத் தோன்றும். சில ஈறுகட்குப் பொருள் மாறும்; சில ஈறுகட்குப் பொருள் மாறா.

எ-டு: வினைமுதனிலை

i. கொள்

ii. வஞ்சி

தொழிற்பெயர்கள்

கொள்ளல், கொள்கை, கொள்ளை, கோள் (பொருள் மாறியவை).

வஞ்சம், வஞ்சனை, வஞ்சகம்

(பொருள் மாறாதவை)