உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




58

கட்டுரை வரைவியல்

15. பன்முறைச் சொற்கள் (Alternative forms of Words and

Phrases)

i. பெயர்ச்சொல்

செய்பொருள், செயப்படுபொருள்; பலபல, பலப்பல, பற்பல; பன்மூன்று, பதின்மூன்று; சிலசில, சிலச்சில, சிற்சில; முன்கை, முன்னங்கை.

பத்தாம் இடக் கலவை யெண்ணுப் பெயர்களின் வருமொழி யான பது என்பது பான் என்றும் வடிவு பெறும்.

எ - டு : ஒன்பது - ஒன்பான்; இருபது - இருபான்.

ii. வேற்றுமை

4ஆம் வே. அவற்கு, அவனுக்கு (ஒருமை)

அவர்க்கு, அவருக்கு, அவர்கட்கு, அவர்களுக்கு - பன்மை அல்லது உயர்வுப்பன்மை.

3ஆம், 7ஆம் வேற்றுமையுருபுகளுடன் ஏகாரமும், நின்று என்னும் 5ஆம் வேற்றுமையுருபுடன் உம்மையிடைச் சொல்லும் பொருளின்றிக் கூடிவருவது வழுவேனும், வழக்கு நோக்கி அமைக்கப்படும். ஆயினும், பொருளற்ற சொற்களை நீக்கி யெழுதுவதே நன்றாம்.

எல்லாம் என்னும் சொல் ஒரு பெயரின்பின் வரின், நிலை மொழியிலேனும், வருமொழியிலேனும் உருபேறும்.

எ - டு : அவற்றையெல்லாம், அவையெல்லாவற்றையும்

iii. வினைமுதனிலை, வினைமுற்று, வினையடிப்பெயர்

ஆ,ஆகு; ஆயிற்று, ஆயினது, ஆனது; உடையது, உடைத்து; ஏற்கா, ஏலா; சிறியது, சிறிது; செய்வேன், செய்கேன்; தூயது, தூய்து; நகு, நகை; நக்கான், நகைத்தான்; நினைந்தான், நினைத்தான்; நினைவு, நினைப்பு (ஞாபகம்); புக்கான், புகுந்தான்; போ, போகு, போது; போகடு, போடு; போனான், போயினான், போந்தான், போகினான்; விடுத்தான், விட்டான்.

பல வினைகளின் புடைபெயர்ச்சி (conjugation) ஒன்றுபோ லிருப்பதால் இங்குக் கூறியவற்றுட் சிலவற்றை வாய்பாடுகளாகவே கொள்க. பின் வருவனவற்றிற்கும் ஈதொக்கும்.

சில ஒன்றன்பாற் குறிப்பு வினைமுற்றுகள் அது, து என்னும் இரு விகுதிகளையும் ஏற்கும். (து-அது என்பதன் முதற்குறை).